Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்... EMI விபரம்..!
Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். ஏனெனில், நகைக் கடன் பெற பிணை ஏதும் தேவை இல்லை. நாம் கொடுக்கும் தங்க நகையின் மதிப்புக்கு ஏற்ப கடன் தொகை கிடைக்கும். பொதுவாக அடகு வைக்கப்படும் தங்கத்தின் அளவு மற்றும் தூய்மையின் அடிப்படையில், கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. மற்ற வகை கடன்களை போல அல்லாமல் நகைக் கடன் உடனே கிடைக்கும்.
நகைக் கடன்கள் (Gold Loan) வாங்கும் போது. குறைந்த வட்டிக்கு எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் நகைக் கடன் வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்நிலையில், நகைக் கடன்களுக்கு குறைந்த வட்டி வசூலிக்கும் சில வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். நகைக் கடனைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கும் 10 வங்கிகளின் (Loan Tips) பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
HDFC வங்கி
தனியார் துறை வங்கியான HDFC வங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கான ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு 8.5 சதவீத வட்டியை வசூலிக்கிறது. இதற்கான மாத EMI தவணை ரூ.22,568 ஆக இருக்கும்.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி 2 ஆண்டு காலத்திற்கான நகைக் கடனுக்கு 8.65 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. ரூ.5 லட்சம் நகைக் கடன் தொகைக்கான மாதத் தவணை ரூ.22,599 என்ற அளவில் இருக்கும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 8.7 சதவீத வட்டியில் நகைக் கடன் வழங்குகிறது. இதில், இரண்டு ஆண்டு காலத்திற்கான ரூ.5 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.22,610 என்ற அளவில் இருக்கும்.
மேலும் படிக்க | கல்விக்கடன் வாங்க திட்டமா... குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் சில வங்கிகள் இவைதான்!
பேங்க் ஆஃப் இந்தியா
இரண்டு ஆண்டு காலத்திற்கான ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு பேங்க் ஆஃப் இந்தியா 8.8 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதற்கு ரூ.22,631 என்ற அளவில் இஎம்ஐ செலுத்த வேண்டும்.
கனரா வங்கி
கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆண்டு காலத்திற்கான தங்கக் கடனுக்கு 9.25 சதவீத வட்டி வசூலிக்கிறது. ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கான இஎம்ஐ ரூ.22,725 என்ற அளவில் இருக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா இரண்டு வருட கால நகைக் கடனாக ரூ.5 லட்சம் வழங்க 9.4 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதற்கான மாதாந்திர இஎம்ஐ ரூ.22,756 என்ற அளவில் இருக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டு ஆண்டு காலத்திற்கான ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு 9.6 சதவீத வட்டி வசூலிக்கிறது. இதற்கு மாதாந்திர இஎம்ஐ தொகையாக ரூ.22,798 செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி இரண்டு வருட காலத்திற்கான ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு 10 சதவீத வட்டி வசூலிக்கிறது. கடன் பெறுபவர்கள் ரூ.22,882 இஎம்ஐ செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி இரண்டு வருட காலத்திற்கான ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு 17 சதவீத வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. இதற்கான இஎம்ஐ ரூ.24,376 ஆக இருக்கும்.
மற்ற வகை கடன்களை விட நகைக் கடன் எந்த வகையில் சிறந்தது?
மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது, நகைக் கடனுக்கான செயல்முறை மிகவும் எளிதானது. நாம் கொடுக்கும் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப கடன் தொகை வழங்கப்படுவதால் கிரெடிட் ஸ்கோர் போன்றவை அதிகம் முக்கியமில்லை. அவசர காலங்களில், உடனடியாக பணம் தேவைப்படும் சூழ்நிலையில் நகைக் கடன் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், தனிநபர் கடன், சொத்துக் கடன், போன்ற பிற வகை கடன்களுடன் ஒப்பிடும்போது நகைக் கடன் வட்டி குறைவாக இருக்கும்.
மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ