மத்திய அரசு புதிய பொருளாதார இலக்கை நிர்ணயித்துள்ளது. 2025-க்குள் நாட்டை ஐந்தாயிரம் பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் இந்த இலக்கை அரசாங்கத்தால் அடைய முடியும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உயிரி எரிபொருட்களை ஊக்குவிக்க தனது அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, எடுத்துக்காட்டாக, எத்தனால் மற்றும் பியூட்டானோல் மலிவானவை மட்டுமல்ல, நாட்டிற்கு அவசியமானவை, ஏனெனில் அவை உமிழ்வைக் குறைக்க உதவுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதாக குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழ்நிலையில், எத்தனால் மற்றும் பியூட்டானோல் போன்ற உயிரி எரிபொருட்களின் மாற்றீட்டை நாம் கடைப்பிடித்து கார்களிலும் விமானங்களிலும் பயன்படுத்தினால் நாட்டின் புதிய பொருளாதார இலக்கை எட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவை, மலிவானது மட்டுமல்லமல், மாசு இல்லாதது என்றும் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கட்காரி கூறுகையில், விமானத் துறை ரூ .40,000 கோடி எரிபொருளை இறக்குமதி செய்கிறது, அவை உயிரி எரிபொருட்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டால், அது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ரூ .40,000 கோடி சந்தையை உருவாக்கும். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் விமான உயிரி எரிபொருள்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.


மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து போல் நாமும் இதைப் பயன்படுத்தினால், நமது அந்நிய செலாவணி இருப்புக்களை சேமிக்க முடியும். இந்த நடவடிக்கைகள் நமது எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும். அதே சமயம், நிலக்கரிக்கு பதிலாக நேப்பியர் புல்லைப் பயன்படுத்தினால், இது ஐந்தாயிரம் பில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க நாட்டுக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.