Indane LPG Gas Cylinder Booking: அதிகரித்து வரும் பண வீக்கம் ஒருபுறம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை என பாதிக்கப்பட்டுள்ள சாமான்ய மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக, எல்பிஜியில் சலுகைகளைப் பெற, ஸ்மார்ட்போன் மூலம், நீங்கள் வீட்டில் எரிவாயு சிலிண்டரை, எளிதான வழிகளில் முன்பதிவு செய்யலாம், சிலிண்டர் விலையையும் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் உட்கார்ந்து உங்கள் எல்பிஜி சிலிண்டரை நொடியில் முன்பதிவு செய்யும் வசதியை இந்தேன் உங்களுக்கு வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IOCL அளித்த தகவல் 


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. வீட்டில் இருந்த படியே எரிவாயு சிலிண்டரை (LPG Cylinder Hike) ஸ்மார்ட்போனின் உதவியுடன் ஸ்மார்ட் புக்கிங் முறைகளைப் பயன்படுத்துங்கள் என்று IOCL தனது ட்வீட்டில் எழுதியுள்ளது. 


ALSO READ | Bank Holidays: ஆகஸ்டில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை; முழு விபரம் உள்ளே!


வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் முன்பதிவு


வாட்ஸ்அப் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய சேவை வழங்குநரிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புவதன் மூலம் ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இதற்கு வாட்ஸ்அப் சேட்டிங்கில் REFILL என டைப் செய்து 7588888824 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் எரிவாயு சிலிண்டர் வாட்ஸ்அப் மூலம் எளிதாக முன்பதிவு செய்யப்படும்.


மிஸ்டு கால் மூலம் முன்பதிவு 


இந்தேன் எரிவாயு வழங்குநருக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டரை புக் செய்யலாம். இதற்காக, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8454955555 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும், சிலிண்டர் சில நொடிகளில் முன்பதிவு செய்யப்படும்.


எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்தல்


எஸ்எம்எஸ் மூலம் உங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்பினால், இதுவும் மிக எளிதான வழி, இதற்கு நீங்கள் <16-இலக்க இந்தேன் ஐடி> <ஆதார் கடைசி நான்கு இலக்கங்கள்> (<16-digit Indane ID><last four digits of Aadhaar>) என 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் இந்தேன் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யப்படும்.


ALSO READ | Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


 


இந்தேன் (Indane) ஆப் மூலம் முன்பதிவு 


இந்தேன் எரிவாயு சிலிண்டரை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதன் செயலியின் மூலம் ஆன்லைனில் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம். இதற்காக, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்தேன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் மற்றும் செயலி நிறுவப்பட்ட பிறகு, அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம்.


Paytm இல் ரூ .900 வரை கேஷ்பேக்


உங்கள் எல்பிஜி சிலிண்டரை பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால், ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம். Paytm செயலியில் லாக் இன் செய்து, எரிவாயு சிலிண்டர் முன்பதிவை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் எரிவாயு வழங்குநரைத் தேர்வு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த பிறகு, நீங்கள் Paytm என்ற ஆன்லைன் கட்டண தளத்தில் முதல் முறை புக் செய்தால், ரூ. 900 வரை கேஷ்பேக் பெறலாம்.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR