மோடி அரசு திட்டம்: தொடர்ந்து மூன்று மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பிறகு, நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க, அரசு புதிய திட்டத்தை தயாரித்துள்ளது. கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோலில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. மேலும் தற்போது டீசல் விற்பனையில் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20,000 கோடி வழங்க யோசனை
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவும், பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) போன்ற அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.20,000 கோடி வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனால், வரும் காலங்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது. இதற்கிடையில் தற்போது எல்பிஜி சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.1053க்கு செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.


மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்


பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க முயற்சி
உண்மையில், பெட்ரோல், டீசல் விலையைப் போலவே உள்நாட்டு எரிவாயு விலையையும் கட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறியதாவது., அரசு எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலையில் கச்சாவை வாங்கி விலை உணர்திறன் சந்தைகளில் விற்க வேண்டும்.


எண்ணெய் அமைச்சகம் 28000 கோடி கேட்டது
ஊடக அறிக்கையின்படி, எண்ணெய் அமைச்சகம் நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்ய 28000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளது. ஆனால், நிதி அமைச்சகம் 20000 கோடி ரூபாய் ரொக்கமாக செலுத்துவதற்கு ஆதரவாக உள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மூன்று பெரிய அரசு நடத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், நாட்டின் பெட்ரோலிய எரிபொருள் தேவைகளில் 90% க்கும் அதிகமானவற்றை வழங்குகின்றனர்.


தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களாக குறைந்த அளவிலேயே இயங்கி வருகிறது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பேரலுக்கு 87.58 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 93.78 டாலராகவும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டமும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ