சீன தலைநகரான பெய்ஜிங்கில் சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் (IOC) நடைபெற்றது. அதில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் அடுத்த ஆண்டு ஐஓசி அமர்வு நடத்துவதற்கான இடம் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா சார்பில் சர்வதேச ஒலிம்பிக் சங்க உறுப்பினர் நீட்டா அம்பானி, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்தரா மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த ஒலிம்பிக் அமர்வு கூட்டத்தை இந்தியாவின் மும்பை நகரில் நடத்த வேண்டும் என நீட்டா அம்பானி வலியுறுத்தினார். அதன்பின்னர் வாக்கெடுப்பு மூலம் இடத்தை தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 83 உறுப்பினர்கள் உள்ள அந்த குழுவில் 70க்கும் மேற்பட்டோர் மும்பையில் நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடைசியாக 1983 ஆம் ஆண்டு ஒலிம்பிக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மும்பையில் ஐஓசி குழு கூட்டம் 2023 -ல் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நீட்டா அம்பானி, இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்பதற்கு பெரு முயற்சி எடுத்தார். அவருடைய முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள நீட்டா அம்பானி, இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் அமர்வு கூட்டத்தால் விளையாட்டு துறையில் மிகப்பெரிய மாற்றம் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஐஓசி கூட்டம் என்றால் என்ன?
ஐஓசி அமர்வு என்பது ஐஓசி உறுப்பினர்களின் வருடாந்திரக் கூட்டமாகும். இது எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் நகரம் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஒலிம்பிக் உறுப்பினர்களை நியமித்தல், விளையாட்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் இதில் விவாதித்து முடிவெடுக்கப்படும். ஒலிம்பிக் போட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR