மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மகாராஷ்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.மேலும், இந்தியாவில் உழவு இயந்திரங்களில் சந்தைத் தலைமையுடன் இது மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் குழுமம் விண்வெளி, வேளாண் வணிகம், சந்தைக்குப்பிறகான வர்த்தகம், வாகன உற்பத்தி, வாகன் உதிரி பாகங்கள், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, பண்ணை உபகரணங்கள், நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல், தளவாடங்கள், அசையாச் சொத்து வணிகம், சில்லறை விற்பனை, பயணியர் வாகனங்கள், தானுந்துகள், இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் உழவு இயந்திரங்களில் சந்தைத் தலைமையுடன் இது மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.


ALSO READ | Cheapest Cars: இந்தியாவின் டாப் 5 மலிவு விலை மின்சார கார்களின் விலை, பிற விவரம் இதோ


மேலும் பிரெஞ்சு நாட்டு தானுந்து நிறுவனமான ரெனோ (Renault) வின் தயாரிப்பான லோகன் என்ற காரை இந்தியாவில் விற்பனை முகவராக இருந்து விற்பனை செய்து வருகிறது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் 30,585 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடங்கும்.



ஜூலை 2021 மாதத்துடன் ஒப்பிடும் போது மஹிந்திராவின் மொத்த விற்பனை 28.8 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. எனினும், முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது வாகன விற்பனை 17 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. உள்நாட்டில் மஹிந்திரா நிறுவனம் 15,786 யுடிலிட்டி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கார் மற்றும் வேன்கள் பிரிவில் 187 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்கள் மொத்த எண்ணிக்கை 3,180 ஆகும்.


ALSO READ | Car Driving Tips: ஓடும் காரில் பிரேக் பழுதானால் என்ன செய்வது? முக்கிய டிப்ஸ் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR