PF Withdrawal Rules: ஒரு முறைக்கு மேல் பணத்தை எடுக்க முடியுமா? EPFO விதிகள் என்ன?
PF Withdrawal Rules 2023: இபிஎஃப்ஓ ஆனது பிஎப் -இலிருந்து பகுதியளவு தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான பல விதிகளை அமல்படுத்துகிறது. எந்த காரணத்திற்காக எத்தனை முறை பணத்தை எடுக்கலாம் என்பதும் இதில் அடங்கும்.
PF Withdrawal Rules 2023: இபிஎஃப்ஓ ஆல் நடத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய நிதியைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், அவசரகாலத்தில் உங்களுக்கு நிதி உதவியும் அளிக்கும். நீங்கள் PF கணக்கில் பகுதியளவு தொகையை திரும்பப் பெறும் (வித்டிராயல்) வசதியையும் பெறுவீர்கள். இதன் மூலம் பல நோக்கங்களுக்காக அதில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் இருந்து தொகையை எடுக்க முடியும். உதாரணமாக, நீங்கள் கடனை செலுத்த வேண்டும் என்றால், இதற்காக நீங்கள் பிஎஃப் -இல் இருந்து பணத்தை எடுக்கலாம்.
ஆனால் இபிஎஃப்ஓ ஆனது பிஎப் -இலிருந்து பகுதியளவு தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான பல விதிகளை அமல்படுத்துகிறது. எந்த காரணத்திற்காக எத்தனை முறை பணத்தை எடுக்கலாம் என்பதும் இதில் அடங்கும். நீங்கள் பிஎப் -இலிருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அதன் நிபந்தனைகளை பற்றி அறிந்துகொள்வது மிக அவசியமாகும். அந்த தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
எந்தெந்த காரணங்களுக்காக பிஎஃப் பணத்தை திரும்பப் பெற முடியும்? (PF Withdrawal Rules)
பிஎஃப் சந்தாதாரர்கள் ஒரு குறிப்பிட்ட பணிக்காலத்தை முடித்த பிறகு பகுதியளவு தொகையை திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். வீடு கட்டுதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல், சில நோய்களுக்கான சிகிச்சை, உங்கள் அல்லது குடும்ப உறுப்பினரின் திருமணம், குழந்தைகளின் மெட்ரிகுலேஷன் படிப்பு மற்றும் ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள் பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கு இபிஎஃப்ஓ உங்களை அனுமதிக்கிறது. இது தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் நீங்கள் பணத்தை எடுக்கலாம்.
மேலும் படிக்க | EPFO Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த மிகப்பெரிய அப்டேட்
ஒரே காரணத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை பணத்தை எடுக்க முடியுமா?
இபிஎஃப்ஓ பல காரணங்களுக்காக பகுதியளவு தொகையை திரும்பப் பெற அனுமதித்தாலும், அதில் பல நிபந்தனைகள் உள்ளன. பல்வேறு காரணங்களில் நீங்கள் ஒரு முறை மட்டுமே திரும்பப் பெற அனுமதிக்கப்படுவீர்கள். ஆனால் சில சமயங்களில் ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்கும் வசதி கிடைக்கும். அதாவது, ஒரே நோக்கத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை பணத்தை எடுக்கலாம்.
எப்போது ஒன்றுக்கு மேற்பட்ட முறை PF இலிருந்து பணத்தை எடுக்க முடியும்?
உங்கள், உங்கள் உடன்பிறந்தவர்கள், உங்கள் மகன் அல்லது மகளின் திருமணத்திற்காக பணத்தை எடுக்க விரும்பினால், திருமண காரணத்திற்காக நீங்கள் மூன்று முறை பகுதியளவு தொகையை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, உங்கள் பிள்ளையின் மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு மூன்று முறை பணம் எடுக்கலாம். இதற்காக, பணியாளரின் வட்டியில் 50% தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. உங்கள் PF கணக்கை திறந்து 7 ஆண்டுகள் ஆன பிறகே இந்த நோக்கங்களுக்காக நீங்கள் பணத்தை எடுக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது, ஏழு வருடங்களாக பிஎஃப் கணக்கை வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் இவற்றுக்காக பணத்தை எடுக்க முடியும்.
கூடுதல் தகவல்:
உயர் ஓய்வுதியம்:
சமீப காலகளில் அதிக ஓய்வுதியம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
அதிக ஓய்வூதியம்: 1.16% பங்களிப்பு கணிதம்
- நிர்வாகம் / முதலாளி தரப்பிலிருந்து 1.16% கூடுதல் பங்களிப்பு
- தற்போதுள்ள விதிகளின்படி, அரசு 1.16% பங்களிக்கிறது.
- 15,000 ரூபாய் வரையிலான வருமானத்தில் இருந்து ஓய்வூதியத்தில் அரசு மானியம்
- நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்தால், முதலாளி 1.16% பங்களிப்பார்.
அதிக ஓய்வூதியம் பற்றிய குழப்பம்
- ஓய்வூதிய நிதிக்கு முந்தைய ஆண்டுகளின் பங்களிப்பு எவ்வாறு வேலை செய்யும்?
- பிஎஃப் கணக்கிலிருந்து கழித்தால், பின் ஓய்வூதிய கார்பஸ் குறைவாக இருக்குமா?
- ஓய்வூதிய நிதியில் பிஎஃப் தொகை எத்தனை சதவீதத்தில் நிரப்பப்படும்?
EPS மூலம் அதிக பென்ஷன்: இதற்கு யார் தகுதியானவர்?
- 1 செப்டம்பர் 2014க்கு முன் EPS உறுப்பினர்களானவர்கள் பயன்பெறலாம்
- 2014 முதல் EPFக்கு தொடர்ந்து பங்களித்து வந்திருந்தால் பலன் கிடைக்கும்.
- 2014ல் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தவர்களும் தகுதியானவர்கள்
EPS: அதிக ஓய்வூதியத்தின் நன்மைகள்
- ஓய்வு பெறும்போது அதிக ஓய்வூதியத்தின் பலன்
- அதிக அடிப்படை வருமானம் இருந்தால் அதிக நன்மைகள்
- ஓய்வுக்குப் பிறகு சமூகப் பாதுகாப்பு வலுவாக இருக்கும்
அதிக ஓய்வூதியம்: தேர்வு செய்யவா அல்லது வேண்டாமா?
- ஓய்வூதியத் தொகைக்கு வரி பிடித்த பிறகு தொகை கிடைக்கும்
- முதிர்வு காலத்தில் பிஎஃப் தொகைக்கு வரி விலக்கு உண்டு
- நீங்கள் புதிய அமைப்பைத் தேர்வுசெய்தவுடன் திரும்பிச் செல்ல வழி இல்லை
- ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் மனைவிக்கு 50% மட்டுமே ஓய்வூதியம்
மேலும் படிக்க | EPF account: வேலை மாறும்போது PF கணக்கை மாற்றாவிட்டால் என்ன நடக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ