Maruti Suzuki discount offer: நம் நாட்டின் மிக நம்பகமான கார் பிராண்டுகளில் மாருதிக்கு தனி இடம் உண்டு. மாருதி நிறுவனத்தின் வாகனங்கள் நீண்ட நாட்களாக மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துள்ளன என்று கூறினால் அது மிகையல்ல. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி தனது சிறப்பு CNG மாடல் கார்களில் லாபகரமான பல நன்மைகளை வழங்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக இந்த சலுகையில் அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது. இதில், நீங்கள் எஸ்-சிஎன்ஜி அடிப்படையிலான கார்களை மலிவான விலையில் வாங்கலாம். இது தொடர்பாக நிறுவனம் ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.


இந்த கார்களில், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட எஸ்-சிஎன்ஜி (CNG) அமைப்பைப் பெறலாம். நீங்கள் அரசு ஊழியராக இருந்தால் எல்.டி.சி போனான்சா சலுகையும் உங்களுக்கு கிடைக்கும்.


மாருது ஆல்டோவில் சலுகைகள்


மாருதி சுசுகியின் (Maruti Suzuki) மிகவும் பிரபலமான மற்றும் சிறிய காரான மாருதி ஆல்டோவில் 35000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இதில், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பின்படி எல்.டி.சி யின் நன்மை கிடைக்கும்.


ALSO READ: ரூ. 32 ஆயிரம் செலுத்தி Maruti Alto 800 காரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!


Wagonr-ரிலும் பெரிய அளவு நன்மைகள்


மாருதி Wagonr காரை ரூ .28000 சலுகையில் வாங்கும் அரிய வாய்ப்பு இப்போது வந்துள்ளது. மாருதியின் இதுபோன்ற S-CNG கார்களுக்கு அரசு ஊழியர்கள் ரூ .4000 வரை சிறப்பு எல்.டி.சி போனான்சா சலுகையைப் பெறுகின்றனர்.


Maruti S-Presso-வில் அதிக சலுகைகள்


எஸ்-பிரீசோவில் மிக அதிகப்படியான நன்மைகள் கிடைக்கின்றன. இதில், 45000 ரூபாய் சலுகையுடன் இந்த காரை வாங்கலாம். தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட இந்த கார்களின் செயல்திறன் மற்றும் மைலேஜ் மிகச் சிறப்பாக உள்ளன என்று மாருதி கூறுகிறது.


மாருதி செலெரியோவில் 40000 ரூபாய் தள்ளுபடி


நீங்கள் மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் கார் செலெரியோவை ரூ .40,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். இது தவிர, வேன் ஈகோவிலும் ரூ .40,000 தள்ளுபடி கிடைக்கிறது.


ஆன்லைனிலும் காரை முன்பதிவு செய்யலாம்


இந்த மாருதி கார்களை (Car) ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் www.mautisuzuki.com –க்கு சென்று புக் செய்யலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளலாம்.


ALSO READ: FASTag குறித்த உங்கள் 10 முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்தது NHAI


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR