வீட்டுக்கடன் வாங்குவோருக்கு கொண்டாட்டம்: பண்டிகை காலத்தில் அசத்தும் அரசின் மானிய திட்டங்கள்
Home Loan Interest Rates: கனவு வீட்டை வாங்க விருப்பமா? அதற்கு வீட்டுக் கடனின் உதவியைப் பெறலாம். குறிப்பாக இந்த நேரத்தில் இந்திய அரசு கடனுக்கு மானியம் வழங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்: சொந்த வீட்டை வாங்குவது நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ள கனவாகும். சிலரால் தங்களிடம் இருக்கும் பணத்தை கொண்டே வீட்டை வாங்க முடிகின்றது. ஆனால், சிலரால் அது முடிவதில்லை. இவர்கள் கடன் வாங்கித்தான் வீடு கட்ட அல்லது வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால், அவர்களுக்கும் குறைந்த வட்டியில் பல சலுகைகளுடன் கடன் பெற பல வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பண்டிகைக் காலத்தில் (Festival Season) உங்களுக்கும் உங்கள் கனவு வீட்டை வாங்க விருப்பமா? அதற்கு வீட்டுக் கடனின் உதவியைப் பெறலாம். குறிப்பாக இந்த நேரத்தில் இந்திய அரசு கடனுக்கு மானியம் வழங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டங்கள் உங்கள் கடன் சுமையைக் குறைக்கும், உங்கள் சொந்த வீடு என்ற கனவும் நனவாகும்.
பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடனின் சுமையை குறைக்க உதவும் வகையில் இந்திய அரசு பல திட்டங்களையும் மானியங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வீடு வாங்க அல்லது கட்ட நீங்களும் வீட்டுக் கடன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்கள் என்றால், இந்தத் திட்டங்களை பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Matri Awas Yojana)
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்தை வழங்குகிறது. வருமானக் குழுவைப் பொறுத்து மானியம் (Subsidy) மாறுபடலாம். இது கடன் தொகையில் 6.5 சதவீதம் வரை இருக்கலாம்.
மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் RD... HDFC RD... எஸ்பிஐ RD... எது பெஸ்ட்..!!
கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (Credit Linked Subsidy Scheme)
க்ரெடிட் லிங்க்ட் சம்சிடி ஸ்கீம் (CLSS) PMAY திட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த திட்டத்தில் EWS, LIG மற்றும் MIG க்கான வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகின்றது. மானியத் தொகையானது கடன் தொகையில் 6.5 சதவிகிதம் வரை இருக்கலாம். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை கிடைக்கும்.
ஸ்டாம்ப் மற்றும் பதிவு கட்டணங்களில் விலக்கு (Exemption in Stamp Duty and Registration)
சில மாநில அரசுகள் பண்டிகைக் காலங்களில் ஸ்டாம்ப் மற்றும் பதிவுக் கட்டணங்களில் விலக்கு அளிக்கின்றன. இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜிஎஸ்டி குறைப்பு (GST Cut)
மலிவு விலை வீடுகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், மற்ற சொத்துகளுக்கு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் கட்டுமான சொத்துகளுக்கான ஜிஎஸ்டியை அரசு குறைத்துள்ளது. இந்த விலக்கு சொத்தின் மொத்தச் செலவு மற்றும் வீட்டுக் கடன் தொகையைக் குறைக்க உதவும்.
சிறிய நகர்ப்புற வீடுகளுக்கான வட்டி மானியத் திட்டம் (Interest Subsidy Scheme For Small Urban Housing)
இந்திய அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புற வீடுகளுக்கு மானியக் கடன்களை வழங்க 600 பில்லியன் ரூபாயை செலவழிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 9 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 3 முதல் 6.5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்களில் சுமார் 25 லட்சம் பேருக்கு இது பலனளிக்கக்கூடும். இடம் மற்றும் பிற காரணிகளை பொறுத்து இந்த திட்டங்களன் கிடைக்கும் தன்மை மற்றும் வகைகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
மேலும் படிக்க | Business Idea: தினம் 4 - 5 மணிநேரம் மட்டுமே வேலை செய்து... லட்சக்கணக்கில் அள்ளலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ