நிலையான வைப்புத்தொகை விகிதங்கள்: பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன, முதலில் பணம் அதாவது அசல் தொகை அதில் பாதுகாப்பாக உள்ளது. இரண்டாவதாக, அது ஒரு நிலையான வட்டியைக் கொண்டுள்ளது, அதாவது வருமானம். நீங்கள் மூன்று வருட FD இல் முதலீடு செய்வதற்கான விருப்பத்தையும் தேடுகிறீர்களானால், மூன்று வருட FD க்கு அதிகபட்ச வட்டியை வழங்கும் சில வங்கிகளின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.1 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.26,000 வட்டி பெறலாம். வாருங்கள்  சீனியர் சிட்டிசன்கள் என்று அழைக்கப்படும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை தரும் வங்கிகள் எவை என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேங்க் ஆஃப் பரோடா - Bank of Baroda:
பேங்க் ஆஃப் பரோடா மூன்று வருட FDக்கு 7.75 (நிலையான வைப்புத்தொகை) சதவீத வட்டியை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில், பாங்க் ஆப் பரோடா மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி அளிக்கிறது. பாங்க் ஆஃப் பரோடா புதிய வட்டி விகிதத்தை 29 டிசம்பர் 2023 அன்று திருத்தியது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட FD களுக்கு ஆண்டுக்கு 6.85 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2 முதல் 3 வருட FDக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதம். 399 நாள் சிறப்பு FDக்கு ஆண்டுதோறும் 7.15 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி இப்போது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூன்றாண்டுகளில் ரூ.1.26 லட்சமாக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Gold Loan: குறைந்த வட்டியில் தங்கத்திற்கு கடன் வழங்கும் வங்கிகள் இவை தான்!


ஆக்சிஸ் வங்கி - Axis Bank:
ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.60 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. தனியார் துறை வங்கிகளில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக உயரும்.


ஹெச்டிஎஃப்சி வங்கி - HDFC Bank:
HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை மூன்று வருட FD களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக உயரும்.


கனரா வங்கி - Canara Bank:
கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.30 சதவீத வட்டி அளிக்கிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக உயரும்.


பாரத ஸ்டேட் வங்கி (SBI) - State Bank of India (SBI):
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூத்த குடிமக்களுக்கு மூன்றாண்டு கால FDக்கு 7.25 சதவீத வட்டி அளிக்கிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக உயரும்.


பேங்க் ஆஃப் இந்தியா - Bank of India:
பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை மூன்று வருட FDக்கு 7 சதவீத வட்டியை வழங்குகின்றன. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது மூன்று ஆண்டுகளில் ரூ.1.23 லட்சமாக உயரும்.


இந்தியன் வங்கி - Indian Bank:
இந்தியன் வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 6.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது மூன்று ஆண்டுகளில் ரூ.1.22 லட்சமாக உயரும்.


இந்திய ரிசர்வ் வங்கி - Reserve Bank of India:
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) ரூ. 5 லட்சம் வரையிலான எஃப்டிகளுக்கு முதலீட்டு உத்தரவாதத்தை வழங்குகிறது. எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நிலையான வைப்புத்தொகையில் 5 லட்சம் வரையிலான உங்கள் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது என்று அர்த்தமாகும்.


மேலும் படிக்க | RBI: ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை! இந்த வங்கியின் உரிமம் ரத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ