Central Government Pensioners Pension Hike: மாதா மாதம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஓய்வுதியதாரர்களுக்கு நன்மை பயக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Central Government: புதிய வழிமுறைகள்


80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு பொதுவாக மூப்பில் பணத்தேவை அதிகரிக்கின்றது. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் அவர்களது பண இருப்பை அதிகரித்து வாழ்க்கை செலவுகளை எளிதாக சமாளிக்கும் வகையில் நிதி நிலையையை பலப்படுத்துவதே அரசின் இந்த புதிய முன்முயற்சியின் நோக்கமாகும். இந்த வயதில் கொடுக்கப்படும் கூடுதல் கருணைக் கொடுப்பனவு இவர்களுக்கு பெரிய அளவில் உதவும் என்பதில் சந்தெகமில்லை.


Super Senior Citizens: சூப்பர் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றங்கள்


பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கூடுதல் கருணை தொகையுடன் கூடிய ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்கள், ஓய்வூதியதாரர் 80 வயதை எட்டிய மாதத்திலிருந்து CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ் இந்த நன்மைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது.


வயது வாரியாக கூடுதல் ஓய்வூதிய பலன்கள்: யாருக்கு எவ்வளவு கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்?


- 80 முதல் 85 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 20%
- 85 முதல் 90 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 30%
- 90 முதல் 95 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 40%
- 95 முதல் 100 வயது வரை: அடிப்படை ஓய்வூதியத்தில் 50%
- 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்: அடிப்படை ஓய்வூதியத்தில் 100%


மேலும் படிக்க | EPFO புதிய விதிகள் அறிமுகம்: இனி இது அவசியம்... மத்திய அரசு செய்த அதிரடி மாற்றம்


ஓய்வூதியம் பெறுவோருக்கு வயது அதிகரிக்கும்போது, அவர்களுக்கு வலுவான நிதி ஆதாரம் இருப்பதை உறுதி செய்வதே இந்த உயர்வின் முக்கியமான நோக்கமாகும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரர் ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்திருந்தால், அவர் ஆகஸ்ட் 2022 முதல் அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியத்தை பெற முடியும்.


Compassionate Allowance: கருணைக் கொடுப்பனவு எப்போது நடைமுறைக்கு வரும்?


- கூடுதல் ஓய்வூதியமானது, ஓய்வூதியதாரர் இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கு தகுதி பெறும்  மாதத்தின் முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.
- அதாவது, ஓய்வூதியம் பெறுவோர் மேம்படுத்தப்பட்ட கொடுப்பனவைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.


ஓய்வூதிய விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைகள் மற்றும் அனைத்து வங்கிகளுக்கும் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் விளக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் ஊக்குவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் (Pensioners) எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உரிய பலன்களைப் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் செயல்பட அரசாங்கம் முற்பட்டுள்ளது. இதன் மூலம், மூத்த குடிமக்கள், வயதான காலத்தில் நிலையான மற்றும் மேம்பட்ட வருமான ஆதாரம் இருப்பதை உறுதி செய்து, அவர்கள் மீதான அக்கறையை அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.


(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.)


மேலும் படிக்க | Personal Loan: தனிநபர் கடன் வாங்க போறீங்களா... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ