பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை கடன் வழங்குபவர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்காததற்காக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.  வங்கி கிளையின் இருப்பிடம் மற்றும் கணக்கில் பராமரிக்கப்படும் தொகை போன்ற காரணிகளைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும்.  இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சராசரி மாத நிலுவையை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!


எஸ்பிஐ கணக்கு தொடங்கப்பட்ட கிளையின் இடத்தைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதம் விதித்தது.  வாடிக்கையாளர்கள் தங்கள் கிளையின் இருப்பிடத்தைப் பொறுத்து, அவர்களின் கணக்குகளில் சராசரியாக ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000ஐப் பராமரிக்க வேண்டும்.  எஸ்பிஐ, தங்கள் சேமிப்புக் கணக்கில் அதிக பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளையும் வழங்குகிறது.  உதாரணமாக 1 லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் வரம்பற்ற இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளைப் பெறுகிறார்கள். 


ஹெச்டிஎஃப்சி வங்கியில் சேமிப்புக்  கணக்கு வைத்திருப்பவர்கள், மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் ரூ. 10,000 மற்றும் அரை நகர்ப்புறங்களில் ரூ. 5,000 மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்க வேண்டும்.  கிராமப்புறங்களில் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.2,500 காலாண்டு இருப்பை பராமரிக்க வேண்டும்.  ஐசிஐசிஐ வங்கி பிப்ரவரி 1, 2022 முதல் வெவ்வேறு சேமிப்புக் கணக்குகளில் மாதாந்திர சராசரி இருப்பைப் பராமரிப்பதற்கான கட்டணங்களைத் திருத்தியது.  வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கு, மெட்ரோ அல்லது நகர்ப்புறங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு ரூ.10,000, அரை நகர்ப்புறங்களுக்கு ரூ.5,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.2,000 பராமரிக்க வேண்டும்.  மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறியதற்கான அபராதத்தை, 5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அல்லது ரூ.500 வங்கி திருத்தியுள்ளது.


மேலும் படிக்க | பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, இனி அதிக லாபம் பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR