விமான நிலையம் தனியார் மயமாக்கல்… விமான போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிவு..!!!
விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விமான நிலையங்களை தனியார்மயமாக்குதல் குறித்த முன்மொழிவை புதன்கிழமை மத்திய அமைச்சரவைக்கு வழங்க உள்ளது
ஏற்கனவே சில விமான நிலையங்கள் அரசு தனியார் கூட்ட்டாளித்துவத்தின் மீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் விமான போக்குவர்த்து துறை அமைச்சகம் விமான நிலையங்களை தனியார்மயமாக்குதல் குறித்த முன்மொழிவை புதன்கிழமை மத்திய அமைச்சரவைக்கு வழங்க உள்ளது.
அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க 2019 செப்டம்பர் மாதம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.
புதுடெல்லி(New Delhi): நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது முன்மொழிவு திட்டத்தை மத்திய அமைச்சரவை முன் புதன்கிழமை முன்வைக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
மேலும், 2030 ஆம் ஆண்டிற்கும் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என வெப்மினார் ஒன்றில் பேசிய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
COVID-19 தொற்றுநோயால் விமானத் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2019 பிப்ரவரி மாதத்தில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை அரசு-தனியார் கூட்டாளித்துவம் (பிபிபி) மூலம் நிர்வாகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பூரி கூறினார். இது நரேந்திர மோடியின் தனியார்மயமாக்கல் தொடர்பான முதல் கட்ட நடவடிக்கையின் போது அனுமதி ஆகும்.
அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க 2019 செப்டம்பர் மாதம் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் AAI, நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை சொந்தமாகக் கொண்டு நிர்வகித்து வருகிறது.
மேலும், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு 2018 ல் முடிவு செய்திருந்தது.
பிப்ரவரி 2019 இல் போட்டி ஏலம் தொடர்பான செயல்முறையில், இந்த ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான உரிமையை அதானி எண்டர்பிரைசஸ் வென்றது.