தங்கத்தை நகையாக வாங்குவது வேஸ்ட்.... தங்கத்தை முதலீடு செய்ய Mutual fund தான் பெஸ்ட்...!!!

கொரோனா காரணமாக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், தங்கம் தான் தற்போது நம்பிக்கை தரும் முதலீடாக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 04:27 PM IST
  • நகையாக வாங்கும் போது கூலி சேதாரம் ஆகிய இழப்புகள் ஏற்படும். அதோடு அதனை பத்திரமாக, திருடு போகமால், தொலையாமல் கட்டிக் காக்க வேண்டும்.
  • கோல்ட் ஈடிஎஃப் மற்றும் தங்க நிதியில் செய்யப்பட முதலீட்டில், கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்கள் 30% க்கும் அதிகமான வருமானத்தை அடைந்து பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தங்கத்தை Gold ETF, Gold fund போன்ற பரஸ்பர நிதி முதலீட்டு வகையில் முதலீடு செய்து முதலீட்டாளர்கள் பயனடையலாம்.
தங்கத்தை நகையாக வாங்குவது வேஸ்ட்.... தங்கத்தை முதலீடு செய்ய Mutual fund தான் பெஸ்ட்...!!! title=

கொரோனா காரணமாக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், தங்கம் தான் தற்போது நம்பிக்கை தரும் முதலீடாக உள்ளது. 

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. பரஸ்பர நிதியம் மூலம்  தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு  வழிகள் உள்ளது. ஆவண வடிவில் தங்கத்தை  முதலீடு செய்வதால், கூலி சேதாரம் என எந்த விதமான இழப்பும் முதலீடு செய்பவருக்கு இல்லை.  நகையாக வாங்கும் போது கூலி சேதாரம் ஆகிய இழப்புகள் ஏற்படும். அதோடு அதனை பத்திரமாக, திருடு போகமால், தொலையாமல்  கட்டிக் காக்க வேண்டும். 

கோவிட் 19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார சூழலில் நிச்சயமற்ற நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முதலீட்டு வழிகளை  பற்றி அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

தங்கத்தின் மீதான முதலீடு சில மாதங்களாக மிகவும் அதிகரித்துள்ளது என்பதற்கு, கிடிகிடுவென உயர்ந்து வரும்  தங்கத்தின் விலையே சாட்சி. 

தங்கத்தின் விலை கடந்த வாரம் 10 கிராமுக்கு 56,000  ரூபாய் என்ற அளவிற்கு  உயர்ந்தது. விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது, மிகவும் பாதுகாப்பானது, நீண்ட கால நோக்கில் நல்ல பலனை தரக்கூடியது என நம்புகின்றனர்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தங்கத்தில்  பல வகையில் முதலீடு செய்யலாம்.

ALSO READ | வீட்டுக் கடன் வாங்க இந்த COVID காலம் சரியான காலமா? ஆம் எங்கிறார்கள் நிபுணர்கள்!

1. Gold ETF - கோல்ட் ஈடிஎஃப் அதாவது எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்ட்ஸ் என்பது, பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முதலீட்டு நிதியாகும். ஒரு யூனிட் கோல்ட் ஈடிஎஃப் என்பது 24 கேரட் 1/2 கிராம் தங்கத்தை குறிக்கும். இதை நாம் எப்போது வேண்டுமானாலும் பங்கு சந்தையில் விற்க இயலும் என்பது கூடுதல் சிறப்பு. அதனால் இது கடையில் நகையாக வாங்கும் தங்க நகை அல்லது காயினை போலவே தான். எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால், நமக்கு சேதாரம், கூலி போன்ற இழப்புகள் இருக்காது.தற்போது உள்ள தங்கத்தின் சந்தை விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

2. Gold fund - அதாவது  தங்க நிதி. தங்க நிதி என்பது தங்கத்தை யூனிட்டுகளாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இதற்கு டிமேட் கணக்கு தேவையில்லை. ஒரு முதலீட்டாளர் மற்ற மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே தங்கத்தை முதலீடு செய்யலாம்.

 

கோல்ட் ஈடிஎஃப்   மற்றும் தங்க நிதியில் செய்யப்பட முதலீட்டில்,  கடந்த ஒரு வருடத்தில்  முதலீட்டாளர்கள் 30% க்கும் அதிகமான வருமானத்தை அடைந்து பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | 2021 முதல் அனைத்து இந்தியர்களுக்கும் E-Passport-களை வழங்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம்

3. Multi Asset Allocation fund: பல சொத்து ஒதுக்கீட்டு நிதி என்பது பல வகை முதலீடுகள் சேர்ந்த ஒரு நிதியாகும். இதில்  தங்கம், ரியல் எஸ்டேட் போன்று குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளில்  முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒரு பிரிவில் குறைந்தபட்ட்சம் 10% முதலீடு செய்யப்பட வேண்டும். இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், ஆவணங்கள் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்த வழி என கருதுகின்றனர்.

4. International gold funds: சர்வதேச தங்க நிதிகளில் சில திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் வெளிநாட்டு தங்க நிதிகளில் யூனிட்டுகளாக முதலீடு செய்யும் வசதி உள்ளது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்,  சர்வதேச நிதிகள் மிகவும் ஆபத்து நிறைந்தது என்றும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது அல்ல என்று நம்புகிறார்கள். சர்வதேச சந்தை நிலவரஙக்ளை புரிந்துகொள்பவர்கள் மட்டுமே அவற்றில் முதலீடு செய்யலாம் என கருதுகின்றனர்.

இதை வைத்து பார்க்கும் போது தங்கத்தை Gold ETF, Gold fund  போன்ற பரஸ்பர நிதி முதலீட்டு வகையில் முதலீடு செய்து முதலீட்டாளர்கள் பயனடையலாம். 

Trending News