இந்தியாவில் Jio 5G Service எப்பொழுது? முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு!
ஜியோ 5 ஜி சேவை 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தெரிவித்தார்.
Jio 5G Service in India: ஜியோ 5 ஜி சேவை 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இன்று (டிசம்பர் 08) நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 (India Mobile Congress 2020) நிகழ்ச்சியின், தனது முக்கிய உரையின் போது தெரிவித்தார். ஜியோ (Jio) வழங்கும் 5 ஜி சேவை மத்திய அரசின் ஆத்மனிர்பர் பாரத் (Atmanirbhar Bharat) கொள்கைக்கு "சான்றாக" இருக்கும் என்று இந்திய கோடீஸ்வரர் குறிப்பிட்டார்.
நாட்டில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதைத் தவிர, ஜியோ கூகுள் (Google) நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் ஆண்ட்ராய்டு தொலைபேசியை உருவாக்கி வருகிறது. இது வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த 4 ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் (4G Android Smartphone) புதிய மாடல் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் விலை சுமார் ரூ. 4,000 வரை இருக்கும்.
63 வயதான அம்பானி (Mukesh Ambani), நாட்டில் 5 ஜி ஆரம்பகாலத்தை விரைவுபடுத்துவதற்கு கொள்கை நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார்.
2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் "5 ஜி புரட்சிக்கு ஜியோ முன்னோடியாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது உள்நாட்டு வளர்ந்த நெட்வொர்க், வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும்" என்று அவர் கூறினார்.
ALSO READ | பல நன்மைகள் கொண்ட Reliance Jio இன் மலிவான திட்டங்கள் இவை..
ஜியோ சில காலமாக தொடர்ந்து 5G சேவையில் பணிபுரிந்து வருகிறார். ஏர்டெல் (Airtel) மற்றும் Vi (Vodafone Idea) உடன் ஒப்பிடும் போது, குறுகிய காலத்தில் அடுத்த தலைமுறை செல்லுலார் சேவைக்கு மாற நாடு தழுவிய எல்.டி.இ-பிரத்தியேக நெட்வொர்க் கவரேஜ் (LTE-exclusive Network Coverage) உதவுகிறது.
இந்தியாவில் 5G சேவையை கொண்டு வர, சாம்சங் (Samsung), குவால்காம் (Qualcomm) உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஜியோ (Jio) செயல்படுகிறது. ஜூலை மாதம் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 43 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அம்பானி, ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஜியோ நாட்டில் 5 ஜி நெட்வொர்க்கை சோதிக்கத் தொடங்குவதாக அறிவித்தார்.
இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் தனது உரையின் போது, 2G நெட்வொர்க்கில் ஏழை மக்களுக்கு இன்னும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் கொண்டுவருவதற்கான கொள்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்பானி மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஜியோ 5 ஜி சேவையின் வருகை ஜியோ இயங்குதளங்களின் தற்போதைய மற்றும் புதிய முன்னேற்றங்களை அதிகரிக்க உதவும்.
ALSO READ | Airtel Vs Jio Vs Vi - 365 நாட்கள் செல்லுபடியாகும் அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்கள்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR