Mutual Funds: 30% வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்கள்... டாப் 5 நிதியங்கள் இவை தான்
ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) என்பது ஒரு வகையான பரஸ்பர நிதியம்.இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.
Mutual Fund Investment With Tax Saving: 2024-25 நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. வரி சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வருமானத்தை அள்ளித் தருவதோடு, வரியைச் சேமிப்பதற்கு உதவுவதால், ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) பலர் விரும்பக் கூடிய முதலீடாக உள்ளது. நாட்டில் உள்ள சில ELSS நிதிகள் கடந்த 3 ஆண்டுகளில் தங்கள் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான வருமானத்தை அளித்துள்ளன. முதலீட்டார்களில் சிலர் 3 ஆண்டுகளில் மொத்த முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளனர். இந்தத் திட்டத்தின் அம்சங்கள், வரிச் சலுகைகள் மற்றும் சிறந்த நிதிகளின் செயல்திறன் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ELSS: வரி சேமிப்பு மற்றும் வருமானத்திற்கான சிறந்த முதலீடுகள்
ELSS முதலீடுகள் வரி சேமிப்புடன் வருமானம் சிறப்பாக கிடைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ELSS முதலீடுகளின் மிகச் சிறந்த அம்சம் அதன் லாக்-இன் காலம். இது 3 ஆண்டுகள் மட்டுமே. பிற வரி சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. இருப்பினும், நீங்கள் 5 வருடங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்தால், வருமானம் இன்னும் சிறப்பாக இருக்கும். ELSS பங்குகளில் குறைந்தது 80% முதலீடு செய்யப்பட வேண்டும் என SEBI விதிகள் கூறுகின்றன. மீதமுள்ள பகுதியை மற்ற சொத்துக்களில் முதலீடு செய்யலாம்.
ELSS முதலீடுகளில் கிடைக்கும் வரிச் சலுகை விபரம்
ELSS திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டில் தள்ளுபடி பெறலாம். லாக்-இன் காலம் முடிந்த பிறகு யூனிட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வரி விலக்கு கிடைக்கும். 1.25 லட்சம் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு (LTCG) வரி இல்லை. இந்தத் வரம்பை தாண்டுகையில் 12.5% என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. இது மற்ற உயர் வரி அடுக்குகளை விடக் குறைவு.
சிறந்த 5 ELSS நிதி முதலீடுகள்
இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகளின் சங்கத்திலிருந்து (AMFI) அனைத்து வருடாந்திர வருமானத் தரவுகளில், நவம்பர் 29 வரை புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சிறந்த வருமானம் கொடுக்கும் நிதிகள் தொடர்பான தரவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தரவுகளில் கொடுக்கப்பட்ட வருமான விகிதத்தின் அடிப்படையில், ரூ.1 லட்சம் முதலீட்டின் 3 ஆண்டுகளுக்கு கிடைத்துள்ள வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், பல ELSS ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்துள்ளன. முதல் 5 ELSS நிதிகளின் விவரங்களையும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கீழே காணலாம்.
1. மோதிலால் ஓஸ்வால் ELSS வரி சேமிப்பு திட்டம் (நேரடித் திட்டம்) முதலீட்டின் 3 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம் (CAGR) 27.94%. அதில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீட்டின் தற்போதைய மதிப்பு: ரூ.2,09,420
2. எஸ்பிஐ நீண்ட கால ஈக்விட்டி (நேரடித் திட்டம்) திட்டத்தின் 3 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம் 26.12%. அதில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீட்டின் தற்போதைய மதிப்பு: ரூ.2,00,610
3. HDFC ELSS வரி சேமிப்பு திட்டத்தின் (நேரடித் திட்டம்) 3 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம் 23.43%. அதில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.1,88,045.
4. ITI ELSS வரி சேமிப்பு திட்டத்தின் (நேரடித் திட்டம்) 3 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம் 22.41. அதில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.1,83,422.
5. JM ELSS வரி சேமிப்பு திட்டத்தின் (நேரடித் திட்டம்) 3 ஆண்டு சராசரி ஆண்டு வருமானம்: 21.58%. அதில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.1,79,716.
ELSS முதலீடுகளின் நன்மைகள் மற்றும் அபாயங்கள்
வரியைச் சேமிக்கும் அதே நேரத்தில் தங்கள் பணத்தையும் பனமடங்காக பெருக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ELSS சிறந்த தேர்வாக இருக்கும். 3 ஆண்டுகள் குறைவான லாக்-இன் காலம் மற்றும் கவர்ச்சிகரமான வருமானம் ஆகியவற்றின் காரணமாக இந்தத் திட்டம் மற்ற விருப்பங்களிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில், 80% ELSS பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், இந்தத் திட்டம் 'மிக அதிக ரிஸ்க்' கொண்ட முதலீடுகள் பிரிவில் வைக்கப்படுகிறது.
பங்குச் சந்தை சந்தை ஏற்ற இறக்கங்கள் வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால், இந்த அபாயத்தைக் குறைக்கலாம். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன், உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை மதிப்பிடவும், அதற்கு ஏற்றவாறு முதலீடு செய்யவும், நம்பகமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரை அணுகுவதும் முக்கியம்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயருமா...? வந்தது பெரிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ