7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? நிபுணர்கள் கருத்து இதுதான்

7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அதன் மூலம் ஊழியர்கள் பெரிய அளவிலான ஊதிய உயர்வை பெறுவார்கள். இது ஊழியர்களின் மொத்த சம்பள அமைப்பிலும் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வரும்.

7th Pay Commission: முன்னர் 50% ஆக இருந்த அகவிலைப்படி தற்போது 53% ஆக அதிகரித்ததை அடுத்து, இது 50% என்ற நிலையை தாண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து அதிகரித்த டிஏ அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற விவாதமும் தீவிரமடைந்தது. இது தொடர்பாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் அரசு இதுவரை என்ன முடிவு எடுத்துள்ளது? நிபுணர்களின் கருத்து என்ன? இவற்றை பற்றி இங்கே காணலாம்.

1 /11

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படியை (டிஏ) 3% உயர்த்தி அறிவித்தது. அதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபடி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை தற்போது 50% லிருந்து 53% ஆக அதிகரித்துள்ளன. இந்த உயர்வு ஊழியர்களுக்கு சற்று நிவாரணத்தை அளித்துள்ளது.  

2 /11

முன்னர் 50% ஆக இருந்த அகவிலைப்படி தற்போது 53% ஆக அதிகரித்ததை அடுத்து, இது 50% என்ற நிலையை தாண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து அதிகரித்த டிஏ அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்ற விவாதமும் தீவிரமடைந்தது. இது தொடர்பாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் அரசு இதுவரை என்ன முடிவு எடுத்துள்ளது? நிபுணர்களின் கருத்து என்ன? இவற்றை பற்றி இங்கே காணலாம்.

3 /11

அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்கும் இந்த யோசனை புதியதல்ல. ஐந்தாவது ஊதியக் குழுவின் போது, ​​அகவிலைப்படி 50% ஐத் தாண்டினால், அதை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் நோக்கம் சம்பள கட்டமைப்பை எளிதாக்குவதாக இருந்தது.

4 /11

எனினும், இது ஒரு பரிந்துரையாக மட்டுமே அளிக்கப்பட்டது. அகவிலைப்படி 50% -ஐத் தாண்டினால் அதை கண்டிப்பாக அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என விதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுவில் இது செயல்படுத்தப்படவில்லை.

5 /11

சமீபத்தில், அகவிலைப்படி 50% -க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் டிஏ அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அடிப்படை சம்பளத்துடன் டிஏவை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ஊதியக் குழுவின் முந்தைய முடிவுகளின்படி தாங்கள் முன்னேறி வருவதாகவும், அடிப்படை சம்பளத்துடன் டிஏவை இணைப்பது குறித்து பரிசீலிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

6 /11

நிபுணர்களின் கருத்து என்ன? இந்த விவகாரத்த்தில் சட்ட மற்றும் பொருளாதார நிபுணர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைப்பது சம்பள அமைப்பில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் இது சிக்கல்களை அதிகரிக்கலாம் என்றும் பல நிபுணர்கள் நம்புகின்றனர். ஐந்தாவது ஊதியக் குழுவின் நேரத்தில் டிஏ இணைப்பு யோசனை முன்வைக்கப்பட்டாலும், 6 மற்றும் 7வது ஊதியக் குழுவும் அதை சேர்க்கவில்லை. இந்த காரணத்தினால், டிஏ இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி அரசாங்கம் அதிகமாக விவாதிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

7 /11

ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டால், அதன் மூலம் ஊழியர்கள் பெரிய அளவிலான ஊதிய உயர்வை பெறுவார்கள். இது ஊழியர்களின் மொத்த சம்பள அமைப்பிலும் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வரும். அதோடு, அகவிலைப்படியின் அடிப்படையில் ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுவார்கள்.

8 /11

அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைந்தால், அதன் காரணமாக ஊழியர்களின் கொடுப்பனவுகள், போனஸ், ஓய்வூதியம் மற்றும் பிற அலவன்சுகளிலும் தாக்கம் ஏற்படும். ஏனெனில் இவை அனைத்தும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டவை.

9 /11

ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரிக்கின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகின்றது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிகப்படுகின்றன.

10 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100) – 115.76)/115.76] x 100 / மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏA% = [(AICPI இன் சராசரி (கடந்த 3 மாதங்களில் அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.