இந்தியாவின் மிகப்பெரிய வங்கி எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவை மற்றும் மொபைல் ஆப் YONO ஆகியவை இன்று (மே 23ஆம் தேதி) மதியம் 2 மணிவரையில் இயங்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சேவைகள் இருக்காது என ஏற்கனவே எஸ்.பி.ஐ தெரிவித்திருந்தது. அதேபோல் அனைத்து வங்கிகளின் தேசிய மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பு (NEFT) சேவையும் இன்று மதியம் 2 மணி வரை இயங்காது. இந்தத் தகவலை மத்திய ரிசர்வ் வங்கி முன்னதாகவே அறிவித்திருந்தது.



சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி வங்கிகள் தொடர் டிஜிட்டல் வங்கி சேவை அதிகளவிலான கோளாறுகளைச் சந்தித்தன.


எனவே, வங்கிகள் தொடர்ந்து தங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன. அதற்காக அவ்வப்போது டிஜிட்டல் வங்கி சேவைகளை முடக்கி வருகின்றன.


Also Read | தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்


இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரிசர்வ் வங்கி தனது NEFT பணப் பரிமாற்ற சேவைகளில் சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டிருப்பதால், 22ஆம் தேதி வர்த்தகம் முடிந்த பிறகு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்படும் எனதெரிவித்திருந்தது.


இதன்படி, எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் வங்கி சேவை, யூனோ செயலி, யூனோ டைல் ஆகியவற்றில் NEFT வங்கி பரிமாற்ற சேவைகள் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 00.01 முதல் 14.00 வரையில் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டது. யூபிஐ, RTGS போன்ற இதர பணப் பரிமாற்ற சேவைகள் எவ்விதமான தடையுமின்றி இயங்கும்  


இதனால் மக்கள் IMPS அல்லது RTGS சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கியில் (SBI Bank) கடந்த சில வருடங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே தொழில்நுட்ப தளத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது.


ALSO READ: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள், நிபுணர்கள் பரிந்துரை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR