இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு அதிகரித்துள்ளதால், டெபிட் கார்டுகளைப் போலவே, கிரெடிட் கார்டுகளும் மக்களின் விருப்பமாக மாறிவிட்டன. இதற்கு முக்கிய காரணம், உங்கள் வங்கியில் போதுமான இருப்பு இல்லையென்றாலும், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம் என்பதுதான். இது ஒரு வகையான கடன் ஆகும். நீங்கள் பின்னர் இதை திருப்பிச் செலுத்த வேண்டும். திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்தையும் நீங்கள் இதில் பெறுவீர்கள். சலுகைக் காலத்தில் செலவழித்த தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்தினால், அந்தத் தொகைக்கு வங்கி உங்களிடம் எந்த வட்டியையும் வசூலிக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்வதன் ஒரு நன்மை என்னவென்றால், அதில் பல வகையான சலுகைகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் போன்றவையும் கிடைக்கின்றன. இந்த அனைத்து காரணங்களாலும், சமீப காலமாக கிரெடிட் கார்டு பிரபலமாகி வருகிறது. நீங்கள் புதிதாக கிரெடிட் கார்டு பயன்படுத்த தொடங்கியிருந்தால், அதன் பயன்பாடு தொடர்பான சில விஷயங்களை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நீங்கள் இதனால் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். இந்த விஷயங்களை பற்றி பொதுவாக வங்கி உங்களுக்கு சொல்லுவதில்லை. 


பணத்தை எடுக்க வேண்டாம்


கிரெடிட் கார்டில் இருந்தும் பணத்தை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதற்கு வரம்பு உள்ளது. ஆனால் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதை நீங்கள் எப்போதும் முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அப்படி எடுத்தால், அதற்காக நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். மறுபுறம், கேஷ் அட்வான்சில் வட்டி இல்லாத கடன் காலத்தால் எந்தப் பயனும் இருக்காது.


குறைந்தபட்ச மற்றும் மொத்த நிலுவைத் தொகை


இரண்டு வகையான நிலுவைத் தொகை (ட்யூ அமவுண்ட்) உள்ளது. ஒன்று மொத்த நிலுவைத் தொகை, மற்றொன்று குறைந்தபட்ச நிலுவைத் தொகை. நீங்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தினால், இதனால் கிடைக்கும் ஒரே நன்மை என்னவென்றால், இதனால் உங்கள் கார்டு பிளாக் செய்யப்படாது. ஆனால் நிலுவைத் தொகைக்கு நீங்கள் அதிக வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த வட்டி மொத்தத் தொகைக்கும் பொருந்தும். எனவே கிரெடிட் கார் பேமண்ட் அதாவது கட்டணம் செலுத்தும்போது எப்போதும் மொத்த நிலுவைத் தொகையை செலுத்துங்கள்.


மேலும் படிக்க | ஜாக்பாட் திட்டம்... மலிவு விலையில் மருந்துகள் - கூடவே வேலைவாய்ப்பும்!


வரம்பில் 30% க்கு மேல் பயன்படுத்த வேண்டாம்


கிரெடிட் கார்டில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல வரம்பு கிடைக்கும், ஆனால் கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவீதத்திற்கு மேல் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவழிப்பவர்களை நிதி ரீதியாக பலவீனமானவர்களாக வங்கி கருதுகிறது. இது உங்கள் CIBIL ஸ்கோரை சேதப்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.


அட்டையை திடீரென மூடிவிடாதீர்கள் (க்ளோஸ்) 


பல முறை, ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள், ஒரு கார்டை திடீரென மூடி விடுவதுண்டு. இது கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (கிரெடிட் யுடிலைசேஷன் ரேஷியோ) அதிகரிக்கலாம். ஏனெனில் உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் முன்பு இரண்டு கார்டுகளாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் ஒரு கார்ட் மூடப்பட்ட பிறகு, அது ஒன்றில் இருக்கும். அதிக கடன் பயன்பாட்டு விகிதத்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமடைகிறது. அதனால்தான் நீங்கள் கார்டைப் பயன்படுத்தாமல் இருந்தாலும், அதை செயலில் வைத்திருங்கள்.


சர்வதேச பரிவர்த்தனை செய்ய வேண்டாம்


கிரெடிட் கார்டு பெறும்போது, ​​வெளிநாட்டில் பயன்படுத்த பலருக்கு கவர்ச்சியான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அதன் பின்னணியில் உள்ள காரணம் வாடிக்கையாளர்களுக்கு சொல்லப்படுவதில்லை. வெளிநாட்டில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை கட்டணத்தை செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்குப் பதிலாக ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்துவது நல்லது.


மேலும் படிக்க | Post Office Scheme: வெறும் ரூ.10,000 டெபாசிட் செய்து, ரூ.16 லட்சத்தை இந்தத் திட்டத்தில் பெறுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ