New Income Tax Rules: 2024ம் ஆண்டு ஜூலை மாதம், மத்திய பட்ஜெட் தாக்கலில் பல புதிய வருமான வரி விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2024-25 நிதியாண்டில் அமல்படுத்தப்பட்ட நிலையில், 2025ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கவும், வரி நடைமுறையை எளிதாக்கவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரி அடுக்குகளில் மாற்றங்கள், விலக்குகளுக்கான புதிய விதிகள் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிக்கும் விதிகள் என பல மாற்றங்கள் இதில் அடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2025 ஐடிஆர் தாக்கலில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விதிகள்


புதிய வருமான வரி அடுக்குகள்


புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி அடுக்கில் அரசு மாற்றங்களைச் செய்துள்ளது. வரி அடுக்குகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரியைச் சேமிக்க உதவும். புதிய வரி முறையின் கீழ் வருமான வரி அடுக்குகளில் மாற்றம் கொண்டு வருவதால், வரி செலுத்துவோர் இந்த நிதியாண்டில் ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க முடியும்.


நிலையான விலக்கு வரம்பில் மாற்றம்


வருமான வரி அடுக்கு மாற்றத்துடன், புதிய வரி முறையின் கீழ் நிலையான விலக்கு வரம்பையும் அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான புதிய வரி விதி முறையில்,  நிலையான விலக்கு முந்தைய வரம்பான ரூ.50,000 என்ற அளவு ரூ.75,000  என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி முறையின் கீழ், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான விலக்கு வரம்பு ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி முறையின் நிலையான விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.


ஆடம்பர பொருட்கள் மீது TCS வரி


ஆடம்பரப் பொருட்களை வாங்குபவர்கள் செலுத்தும் TCS (மூலத்தில் வசூலிக்கப்படும் வரி) வரியை பொருத்தவரை, 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களுக்கு டிசிஎஸ் விதிக்கப்படும். இந்த புதிய சட்டம் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஆனால், ஆடம்பரப் பொருட்களின் பட்டியல் மற்றும் டிசிஎஸ் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசு இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.


RBI மிதக்கும் விகிதப் பத்திரங்களில் TDS


ரிசர்வ் வங்கியின் ஃப்ளோட்டிங் ரேட் பாண்டுகளில் கிடைக்கும் வட்டி மாதம் ரூ.10,000 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் டிடிஎஸ் கழிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் மிதக்கும் விகிதப் பத்திரங்களை, வருமானம் TDS முறைக்கு உட்பட்ட நிதி முதலீடுகளின் பட்டியலில் அரசாங்கம் சேர்த்துள்ளதே இதற்கு காரணம். 


வீடு விற்பனையில் TDS மாற்றம்


சொத்து விற்பனைக்கான டிடிஎஸ் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. திருத்தத்தின்படி, மொத்த பரிவர்த்தனை ரூ.50 லட்சத்தைத் தாண்டினால், விற்பவருக்குச் செலுத்தப்பட்ட மொத்தப் பணத்திலிருந்து டிடிஎஸ் கழிக்கப்பட வேண்டும்.  புதிய மாற்றம் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.


மேலும் படிக்க | மிடில் கிளாஸ் மக்களுக்கு காத்திருக்கும் Good News.... வருமான வரி விதிப்பில் நிவாரணம்?


LTCG மற்றும் STCG  மூலதன ஆதாயத்திற்கான புதிய வரி விகிதங்கள்


2024-25 நிதியாண்டு முதல் மூலதன ஆதாய வரி விதிப்பு விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. மூலதன ஆதாய வரிவிதிப்பு முறையை எளிமையாக்க LTCG (நீண்ட கால மூலதன ஆதாயங்கள்) மற்றும் STCG (குறுகிய கால மூலதன ஆதாயங்கள்) மீதான வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. 


குறுகிய கால மூலதன ஆதாயங்கள்


ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த பரஸ்பர நிதிகளில் குறுகிய கால மூலதன ஆதாயங்கள் (STCG) 20% வரி விதிக்கப்படும். முன்னதாக இது 15% ஆக இருந்தது, அதாவது 5% அதிகரிக்கப்பட்டுள்ளது.


நீண்ட கால மூலதன ஆதாயங்கள்


சொத்திலிருந்து பெறப்படும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) மீது 12.5% ​​வரி விதிக்கப்படும். அதேசமயம் முன்பு வெவ்வேறு சொத்துக்களுக்கு வித்தியாசமான வரிவிதிப்பு முறை. ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.25 லட்சம் வரையிலான LTCG வருமானத்தில் வரி விலக்கு கிடைக்கும். இதற்கான விலக்கு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது.


NPS திட்டத்தில் முதலாளியின் பங்களிப்பில் அதிகப் பிடித்தம்


புதிய வரி முறையில், NPS (தேசிய ஓய்வூதிய முறை) திட்டத்தில் பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புகளுக்கான விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 10% ஆக இருந்த விலக்கு வரம்பு தற்போது 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், ஓய்வூதியம், FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ