டேப்டோக்கனைசேஷன் செய்யப்படுவதால் ஆன்லைன் பரிவர்த்தனையின்போது நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் உண்மையான விவரங்களை நிறுவனங்கள் சேமிக்க முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கியானது அக்டோபர்-1 முதல் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உதவும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை,  ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷனாக மாற்றுவதன் மூலம் சில விதிகள் அமலுக்கு வரவுள்ளது.  டோக்கனைசேஷனுக்கான காலக்கெடு ஜூலை-1 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பின்னர் மூன்று மாதங்கள் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு டோக்கனைசேஷன் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.  பெரும்பாலான பெரிய வணிகர்கள் ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.  டோக்கனைசேஷன் என்பது உண்மையான கார்டு விவரங்களை "டோக்கன்" எனப்படும் மாற்றுக் குறியீட்டுடன் மாற்றப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு 



ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையில் சில நிறுவனங்கள் நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைத்துக்கொண்டு அதனை தவறான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  இந்நிலையில் கார்டுகள் டோக்கனைசேஷன் செய்யப்படுவதால் ஆன்லைன் பரிவர்த்தனையின்போது நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் உண்மையான விவரங்களை நிறுவனங்கள் சேமிக்க முடியாது, இதன்மூலம் கார்டு பரிவர்த்தனையை பாதுகாப்பான முறையில் செய்யமுடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், டெஸ்க்டாப்கள், வாட்சுகள், கையில் அணியும் பேண்டுகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற சாதனங்களிலும் டோக்கனைசேஷன் அம்சம் கிடைக்கிறது.  கார்டுகளை டோக்கனைசேஷன் செய்வதன் மூலம் இனி நீங்கள் எவ்வித அச்சமுமின்றி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.  முன்னரெல்லாம் முதன்முறையாக இ-காமர்ஸ் தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது, ​​16 இலக்க டெபிட் கார்டு எண்ணையும் அதன் பிறகு சிவிவி குறியீட்டையும் கேட்பார்கள். அதன்பின்னர் அவர்கள் நம்முடைய 16 இலக்க எண்ணை சேமித்து வைத்திருப்பார்கள்.  தற்போது ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, நாம் ஒரு பொருளை வாங்கும்போது, வணிகர் டோக்கனைசேஷன் செயலமுறையை தொடங்குவார்.  அதற்காக கார்டை டோக்கனைஸ் செய்ய நம்மிடமிருந்து அவர் ஒப்புதல் பெற்று அதனை கார்டு நெட்வொர்க்கிற்கு அனுப்புவார்.  கார்டு நெட்வொர்க் ஒரு டோக்கனை உருவாக்கும், இது ப்ராக்ஸி கார்டு எண்ணாக செயல்பட்டு அதை வணிகருக்கு திருப்பி அனுப்பும்.


மேலும் படிக்க | இந்த தேதியில் வெளியாகிறது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி உயர்வு? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ