நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி, தஞ்சை நான்சி மஹால் திருமண மண்டபத்தில் முதல் மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் அழைப்பிதழ் கொடுத்து தொண்டர்களை வரவேற்றார் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி N ஆனந்த். அப்போது பேசிய அவர், "முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழிலை பார்க்க வேண்டும், அதில் வரும் வருமானத்தில் இருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லுகிற தலைவன் தளபதி என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
மேலும் படிக்க | அமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்தி
நம் நிர்வாகி ஒருவர் எனக்கு லீவ் வேணும் முதலாளி எனக் கேட்கும் போது 26, 27 எவ்வளவு முக்கியமான நாள் நீ லீவு கேட்கிறியே என முதலாளி கூற, முதலாளி நான் உன்கிட்ட 18 வருஷமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். எனக்கு இரண்டு நாள் லீவு கொடுத்து விடு அப்படின்னு கேட்டதற்கு, அப்படி நீ லீவ் எடுத்தா உனக்கு போனஸ் கிடையாது, வேலையை விட்டு எடுத்து விடுவேன் என கூறிய முதலாளியிடம் நீ வேலையை விட்டு எடுத்தா என்ன போனஸ் கொடுக்காட்டி என்ன என் தலைவன் தளபதியை நான் பார்க்க வேண்டும். உன் வேலையும் வேண்டாம் இதுவும் வேண்டாம், அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு உண்மையான தொண்டன் இருக்கிறான் என்றால் அது நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டன் தான்" என குட்டி கதை கூறி மாநாட்டிற்கு நிர்வாகி மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார் புஸ்ஸி N.ஆனந்த்.
பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக UP மஹாலில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போலீசார் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர் மாநாட்டினைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டோகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் குட்டி கூறுகையில், 40 ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வரும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் விஜய்யை பார்த்து பயந்து போவதாகவும், இல்லையென்றால் எதற்காக தமிழக வெற்றி கழக கொடியை ஏற்ற விடாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எதற்காக தடுக்க வேண்டும் என்றும், இதற்கான முடிவு வருகிற 2026ல் நடிகரும் தமிழக வெற்றி கழக நிறுவனருமான விஜய் ஆட்சி கட்டிலில் அமர்வது உறுதி என்றும், அவரை நாங்கள் அமர வைப்போம் என்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.மதன், திரு.ஸ்டாலின், திரு.மணி, திரு.ஆனந்த, திரு.பூரணசந்திரன், திரு.ராஜா மற்றும் கழக தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைவர்களுக்கும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டது ஏன்...? முழு பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ