வரும் ஜனவரி முதல் ATM எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் OTP முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலமாக ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ஸ்டேட் வங்கி ஒரு புதிய முறையை ஒன்று அறிமுகம் செய்கிறது.


அந்த வகையில்  ஏற்கனவே ஏ.டி.எம். எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது. இந்த நிலையில் தற்போது ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் (ஓ.டி.பி.) முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது.


இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும்.  ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது.


அதன்படி வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த புதிய முறைப்படி ஏ.டி.எம். (ATM) எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுத்தால் ஓ.டி.பி. (OTP) எண்ணை குறிப்பிட்ட பிறகு தான் எந்திரத்தில் இருந்து பணம் வரும்.