மத்திய அரசு, 2016 ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க, பாஸ்டேக் (FASTag) எனும் மின்னணு அட்டை முறையை அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கம், சுங்க சாவடிகளில், அதாவது டோல் ப்ளாஸாவில் கட்டணம் வசூலிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் (FASTag) அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதற்கான காலக் கெடுவை மத்திய அரசு (Central Government) பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டித்தது. தற்போது அது நிறைவடைய உள்ள நிலையில், இப்போது பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில மோசடி நபர்கள் ஆன்லைனில் போலி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த ஃபாஸ்டேக்குகள் போலியானவை என்று NHAI எச்சரித்துள்ளது.


மோசடி FASTag வழக்குகள் சில வந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) போலி FASTag களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடி செய்பவர்கள் NHAI / IHMCL ஐப் போலவே போலி FASTag ஐ விற்கத் தொடங்கியுள்ளனர் என தேசிய நெடுஞ்சாலைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
FASTag ஐ எங்கே வாங்குவது?


இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, https://ihmcl.co.in/  என்ற வலைதளத்தை பார்வையிடுவதன் மூலமோ அல்லது மைஃபாஸ்டாக் செயலியை (MyFastag App) பயன்படுத்துவதன் மூலமோ அசல் ஃபாஸ்டேக்கை மட்டுமே வாங்குமாறு NHAI பயனர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


பட்டியலிடப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட  விற்பனை முகவர்களிடமிருந்தும் FASTag ஐ வாங்கலாம். ஃபாஸ்டாக் பற்றிய தகவல்கள்  IHMCL வலைத்தளத்திலும் கிடைக்கின்றன.


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஹெல்ப்லைன் எண் 1033 ஐ அழைப்பதன் மூலம் போலி ஃபாஸ்டாக் குறித்து புகார் செய்யலாம்.


ALSO READ | FASTag பெறுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா.. மத்திய அரசு கூறுவது என்ன..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR