7வது சம்பள கமிஷன், சமீபத்திய அப்டேட்: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணியாளர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்தெ செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த சமீபத்திய புதுப்பித்தலின் படி, சில மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கிடைக்காது. இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் புதிய விதி: 


மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) அகவிலைப்படி பரிசை அளித்த பிறகு, தற்போது அரசு மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த விதிகளை மத்திய அரசு ஊழியர்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்களது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியில் பெரிய பாதிப்பு ஏற்படும். பணியில் ஏதேனும் அலட்சியம் காட்டினால், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் (Pension) மற்றும் பணிக்கொடையை (Gratuity) நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது மத்திய ஊழியர்களுக்குப் பொருந்தும். ஆனால் எதிர்காலத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கும் இது அமல்படுத்தப்படலாம். 


அறிவிப்பு வெளியிடப்பட்டது


மத்திய அரசு சமீபத்தில் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8ஐ மாற்றியுள்ளது. அதில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பில், மத்திய ஊழியர் பணிக் காலத்தில் ஏதேனும் கடுமையான குற்றம் செய்தாலோ அல்லது அலட்சியமாக இருந்தாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பணி ஓய்வுக்குப் (Retirement) பிறகு அவரது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


மாற்றப்பட்ட விதிகள் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசு (Central Government)
அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைத்தால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த முறை இந்த விதியில் அரசு கடுமையாக உள்ளது.


மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!


இவர்களுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது


- ஓய்வுபெற்ற ஊழியர்களின் நியமன அதிகாரத்தில் ஈடுபட்டுள்ள ப்ரெசிடெண்டுகளுக்கு பணிக்கொடை அல்லது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


- ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடைய இத்தகைய செயலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.


- ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், குற்றவாளிகளின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை அவர்கள் ஓய்வுக்குப் பிறகு நிறுத்தி வைக்கும் உரிமை CAG க்கு வழங்கப்பட்டுள்ளது.


எப்படிப்பட்ட நடவடிக்கை எப்படி எடுக்கப்படும்? 


- வெளியிடப்பட்ட விதிகளின்படி, பணியின் போது இந்த ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.


- ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் பணியமர்த்தப்பட்டால், அதே விதிகள் அவருக்கும் பொருந்தும்.


- ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை செலுத்தப்பட்டு, அதன் பிறகு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை திரும்பப் பெறலாம்.


- துறைக்கு ஏற்பட்ட இழப்பின் அடிப்படையில் அதன் மதிப்பீடு செய்யப்படும்.


- அரசு அதிகாரிகள் விரும்பினால், அவர்கள் பணியாளரின் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தலாம்.


இறுதி உத்தரவுக்கு முன் பரிந்துரைகள் கேட்கப்பட வேண்டும்


இந்த விதியின்படி, எந்தவொரு அதிகாரியும் இறுதி உத்தரவை வழங்குவதற்கு முன் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் இருந்து பரிந்துரைகளை பெற வேண்டும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ, குறைந்தபட்சத் தொகை மாதம் 9000 ரூபாய்க்கு குறைவாக இருக்கக்கூடாது. இது ஏற்கனவே விதி 44ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | உங்கள் பிஎஃப் பங்களிப்பை 12% -க்கு மேல் அதிகரிப்பது எப்படி? விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ