PNB வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இனி ஒரு வங்கி கணக்கிற்க்கு 3 டெபிட் கார்டு பெறலாம் - எப்படி என்பதை அறிக..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு 'ஆடான் கார்டு' மற்றும் 'ஆடான் கணக்கு' என்ற பெயரில் இரண்டு வசதிகளை வழங்கி வருகிறது. இதன் கீழ், Add on Card வசதியின் கீழ் வங்கி கணக்கில் மூன்று டெபிட் கார்டுகளை (Debit Cards) எடுக்கலாம். அதே நேரத்தில், கணக்கு சேர்க்கும் வசதியின் கீழ், மூன்று கணக்குகளை டெபிட் கார்டுடன்  (Add on Account Facility) இணைக்க முடியும்.


நாட்டின் அனைத்து வங்கிகளும் ஒரு வங்கி கணக்கிற்கு ஒரு டெபிட் கார்டை (ATM/Debit Card) மட்டுமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. வேறுவிதமாகக் கூறினால், ஒரு வங்கிக் கணக்கு (Bank Account) மட்டுமே டெபிட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்க வசதியை வழங்குகிறது. PNB தனது வாடிக்கையாளர்களுக்கு 'ஆடான் கார்டு' (Add on Card) மற்றும் 'ஆடான் கணக்கு' (Add on Account) என்ற பெயரில் இரண்டு வசதிகளை வழங்குகிறது. இந்த ஆடோன் கார்டு வசதியின் கீழ், மூன்று டெபிட் கார்டுகளை வங்கி கணக்கில் எடுக்கலாம். அதே நேரத்தில், add on கணக்கு வசதியின் கீழ், மூன்று கணக்குகளை ஒரு டெபிட் அட்டையுடன் இணைக்க முடியும். 


ALSO READ | Jio-வின் மலிவான ரீசார்ஜ் திட்டம்: 1 ஆண்டுக்கு வரம்பற்ற தரவு, இலவச அழைப்பு!!


Add on Card வசதி 


PNB படி, ஆட் ஆன் கார்டு வசதியின் கீழ், ஒரு வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் தனக்காக வழங்கப்பட்ட டெபிட் கார்டுடன் கூடுதலாக குடும்ப உறுப்பினர்களுக்கு 2 ஆடோன் கார்டுகளையும் பெறலாம். இதில் பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். இந்த அட்டைகளின் உதவியுடன், பிரதான கணக்கிலிருந்து திரும்பப் பெறலாம்.


Add on Account வசதி


மூன்று வங்கி கணக்குகளை டெபிட் கார்டுடன் இணைக்கும் வசதி குறைவாக உள்ளது. இந்த வசதியின் கீழ், அட்டை வழங்கும் நேரத்தில் ஒரு அட்டையில் மூன்று வங்கி கணக்குகளை மட்டுமே இணைக்க முடியும். அவற்றில் ஒன்று பிரதான கணக்காகவும், இரண்டு மற்ற கணக்குகளாகவும் இருக்கும். PNB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த மூன்று கணக்குகளில் ஏதேனும் ஒரு பற்று அட்டை மூலம் பரிவர்த்தனை செய்யலாம். இருப்பினும், இந்த வசதி PNB ATM-களில் மட்டுமே கிடைக்கும். மற்றொரு வங்கியின் ATM பயன்படுத்தப்பட்டால் மட்டுமே பிரதான கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யப்படும். அதே நேரத்தில், வங்கி கணக்குகள் PNB-யின் எந்த CPS கிளையிலும் இருக்கலாம், ஆனால் மூன்று கணக்குகளும் ஒரே நபரின் பெயரில் இருக்க வேண்டும். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR