OPS vs NPS: சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தினமும் பல புதுப்பிகளும் வந்துகொண்டு இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme) மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பியப்பட்டுள்ளது. என்பிஎஸ் ஊழியர்கள் தங்கள் டெபாசிட்களை திரும்பப் பெறுவதற்கான கூடுதல் விருப்பங்களைப் பெறுவார்கள். இந்த பணியாளர்கள், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்தர அடிப்படையில், வழக்கமான முறையில் தொகையை திரும்பப் பெறும் நேரத்தில், 75 வயது வரை தங்கள் ஓய்வூதிய நிதியில் 60% திரும்பப் பெறலாம்.


இந்தத் தகவலை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தற்போதைய திரும்பப் பெறுதல் விதிகளின்படி, சந்தாதாரர் அறுபது வயது அல்லது ஓய்வு பெற்ற பிறகு 75 வயது வரை வருடாந்திர வசதி மற்றும் மொத்தத் தொகையை திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை ஒத்திவைக்கலாம். மொத்தத் தொகையை ஒரு முறை அல்லது வருடாந்திர அடிப்படையில் திரும்பப் பெறலாம். வருடாந்திர அடிப்படையில் தொகை திரும்பப் பெறப்பட்டால், சந்தாதாரர் ஒவ்வொரு முறையும் தொகையை எடுப்பதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும். 


பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) (NPS இன் கீழ் வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிமுறைகள் 2015 மற்றும் அதன் திருத்தங்களின் 3 மற்றும் 4 விதிமுறைகளின்படி, முறையான மொத்தத் தொகை திரும்பப் பெறுதல் (SLW) மூலம் மொத்தத் தொகையை படிப்படியாக திரும்பப் பெறுவதற்கான விருப்பம் வழங்கப்படும். SDLW மூலம், சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியில் அறுபது சதவீதத்தை, 75 வயது வரை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | ராகுல் ட்ராவிட் போல ஆடுங்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ கவர்னரின் முக்கிய அறிவுரை!!


அறுபது வயதை எட்டிய அல்லது ஓய்வுபெறும் சந்தாதாரர்களுக்கு SLW பற்றி தெரிவிக்குமாறு பிஎஃப்ஆர்டிஏ அதன் அனைத்து நோடல் அலுவலகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய ஊழியர்கள் என்பிஎஸ் -இல் இருந்து விலக விரும்பினால், அதற்கான செயல்முறைகள் மூலம் அது செய்யப்படும். 


தேசிய ஓய்வூதியத் திட்டம் vs புதிய ஓய்வூதியத் திட்டம்


தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)


1. NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.


2. தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.


3. இதன் கீழ், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.


4. இந்தத் திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.


5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை.


மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் சூப்பர் செய்தி: ஊழியர்களுக்கு கிடைக்கும் முத்தான் 3 ஆப்ஷன்ஸ்!! விவரம் இதோ


பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)


1. இதன் கீழ், கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம், ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகையுடன் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.


2. 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடும் உள்ளது. ஜி.பி.எஃப்-க்கான ஏற்பாடும் உள்ளது.


3. இதன் கீழ், 20 லட்சம் ரூபாய் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது.


4. இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. பணியாளரின் சம்பளத்தில் இருந்தும் பணம் கழிக்கப்படுவதில்லை.


5. ஓய்வு பெற்ற ஊழியரின் மனைவிக்கு அவர் இறந்தவுடன் ஓய்வூதியம் வழங்கும் வசதி இதில் உள்ளது. இதன் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிஏவும் வழங்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது. 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: SCSS திட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்த அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ