பழைய ஓய்வூதியம் முக்கிய அப்டேட்: மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டு ஓபிஎஸ், உத்தரவு வெளியானது!!

Old Pension Scheme:  மாநில கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2023, 02:27 PM IST
  • விரைவில் பழைய ஓய்வூதிய பலன் கிடைக்கும்.
  • மாநில கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள ஊழியர்கள்-ஆசிரியர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
  • சமீபத்தில், கணக்காளர்களுக்கு ஓபிஎஸ் சலுகைகளை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பழைய ஓய்வூதியம் முக்கிய அப்டேட்: மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டு ஓபிஎஸ், உத்தரவு வெளியானது!! title=

பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தினமும் பல புதுப்பிகளும் வந்துகொண்டு இருக்கின்றன.  

இதற்கிடையில் உத்தரபிரதேச மாநில கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கணக்காளர்களுக்குப் பிறகு, விரைவில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய பலன் (Old Pension Scheme) கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து துறைகளும் இதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளன. இதற்காக, இடைநிலைக் கல்வி இயக்குனரகம், அனைத்து கோட்ட இணைக் கல்வி இயக்குநர்கள் மற்றும் துணைக் கல்வி இயக்குநர்களிடம் 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்களை கேட்டுள்ளது.

விரைவில் பழைய ஓய்வூதிய பலன் கிடைக்கும்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், 2005, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், பணி நியமன விளம்பரம் வெளியான ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு (State Government Employees), பழைய ஓய்வூதிய பலன் விரைவில் வழங்கப்படும். அதற்கான ஆயத்தப்பணிகளை, துறை துவக்கியுள்ளது. இடைநிலைக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து, நவம்பர் 16ம் தேதிக்குள் விவரங்களை கேட்டிருந்தார். இதன் கீழ், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர், அவர்களின் நிறுவனத்தின் பெயர், விளம்பரம் செய்யப்பட்ட தேதி, சேர்ந்த தேதி மற்றும் முதல் சம்பளம் செலுத்திய தேதி போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, அடுத்த செயல்முறை தொடங்கும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: 44% ஊதிய உயர்வு... அதிரடியாய் உயரும் அலவன்சுகள்

இந்த ஊழியர்கள்-ஆசிரியர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்

இதன்படி, 2005 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த பணிக்கான நியமன விளம்பரம் இதற்கு முன் வெளியாகி இருந்தால், அத்தகைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பழைய ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள். ஏப்ரல் 1, 2005 -க்கு பின், மாநில அரசு பழைய ஓய்வூதியத்தை, ரத்து செய்து புதிய ஓய்வூதிய முறையை அமல்படுத்தியது. அதன் பின்னர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதன் பிறகு தற்போது ஏப்ரல் 1, 2005 க்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரம்  வெளிவந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில், கணக்காளர்களுக்கு ஓபிஎஸ் சலுகைகளை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் தேர்வு செய்யப்பட்ட கணக்காளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுதாரர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என கருதி பழைய ஓய்வூதிய பலனை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த 2003-2004ம் ஆண்டு பணி நியமனத்தில் தேர்வு செய்யப்பட்ட கணக்காளர்கள் குறித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதி சரல் ஸ்ரீவஸ்தவா அடங்கிய ஒற்றை பெஞ்ச் அளித்துள்ளது.

மேலும் படிக்க | கிரெடிட் கார்ட், தனிநபர் கடன் வாங்கியவர்கள் உஷார்: விதிகளை கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News