ராகுல் ட்ராவிட் போல ஆடுங்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ கவர்னரின் முக்கிய அறிவுரை!!

RBI Update: பணவீக்கத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். வங்கிகள் நீண்டகால, அதாவது லாங் டர்ம்  திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2023, 06:34 PM IST
  • ராகுல் டிராவிட் போல் விளையாடுங்கள்: சக்திகாந்த தாஸ்
  • மிக விரைவான வளர்ச்சி நிலையானது அல்ல: சக்திகாந்த தாஸ்
  • மாறும் காலத்திற்கே ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும்: சக்திகாந்த தாஸ்
ராகுல் ட்ராவிட் போல ஆடுங்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ கவர்னரின் முக்கிய அறிவுரை!! title=

RBI Update: FICCI மற்றும் IBA இன் நிகழ்ச்சியில் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் நாட்டின் நிதி நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உலகம் முழுவதும் தொடர்ச்சியான நெருக்கடிகள் நிலவி வருவதாகவும் அவர் கூறினார். பணவீக்கத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். வங்கிகள் நீண்டகால, அதாவது லாங் டர்ம்  திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

ராகுல் டிராவிட் போல் விளையாடுங்கள்: சக்திகாந்த தாஸ்

பாதுகாப்பற்ற கடன்களுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் (Risk Weightage) அதிகரிப்பு பல கலந்தாலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு எடுக்கப்பட்டதாக தாஸ் கூறினார். குறுகிய கால அடிப்படையில், அதாவது ஷார்ட் டர்மில் அல்லாமல், ராகுல் டிராவிட் போல வங்கிகள் நீண்ட காலத்திற்கு, அதாவது லாங்க் டர்மிற்காக விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank) ஆளுநர் கூறினார். நுகர்வோர் கடனில் கடன் அபாய அளவை அதிகரிக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவு பலரால் பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. இது குறித்து கவர்னர் சமீபத்தில், நுகர்வோர் கடன் வழங்கும் போது வங்கிகள் நீண்ட கால சொத்துக்களின் தரம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். நல்ல சொத்து தரம் வங்கிகளின் இருப்புநிலையை பலப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ரிசர்வ் வங்கியின் (RBI) ரிஸ்க் லோன் வெயிட்டேஜ் முடிவு நுகர்வோர் கடன்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, ஏன் மற்ற கடன்களில் இல்லை? இது குறித்து பேசிய ஆளுநர், ‘வீட்டு வசதி, வாகனம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைகளில் கூட கடன்கள் மிக வேகமாக விநியோகிக்கப்பட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ன. ஆனால் இங்கும் அழுத்தம் உருவாகிறது. ஆனால் வளர்ச்சியும் அவசியம் என்பதால் ரிசர்வ் வங்கி அவற்றை இந்த முடிவில் இருந்து விலக்கி வைத்துள்ளது.’ என்றார்.

உள்நாட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கொள்கை வட்டி விகிதங்களை உயர்த்தியது என்றார். "மொத்த மற்றும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ள நிலையில், நாங்கள் இப்போது பணவீக்கத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க பத்திர வருவாயில் அதிகரிப்பு இருந்தபோதிலும் இந்திய ரூபாய் குறைந்த ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: SCSS திட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்த அரசு

வங்கிகள் மற்றும் NBFC -கள் வழங்கும் ஆலோசனைகள்

இன்று, வங்கிகள் மற்றும் NBFC -களின் இருப்புநிலைகள் வலுவாக உள்ளன என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das) கூறினார். ‘தற்போது, ​​இடர் மேலாண்மை நடைமுறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வங்கிகள் மற்றும் NBFC -கள் அதிக விலையுள்ள குறுகிய கால மொத்த வைப்புகளை பெரிதும் நம்பியுள்ளன, ஆனால் பல சில்லறை மற்றும் பெருநிறுவன கடன்களின் காலத்தை நீட்டிக்கின்றன. வங்கிகள் மற்றும் NBFC -கள் நிலையான கடன் வளர்ச்சியை ஆய்வு செய்கின்றன. மிக விரைவான வளர்ச்சி நிலையானது அல்ல.’ என அவர் தெரிவித்தார்.

வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சி பற்றி கூறிய ஆர்பிஐ ஆளுநர், ‘வங்கிகள் மற்றும் NBFC களின் தொடர்பை ஆர்பிஐ கவனித்து வருகிறது. இது ஒரு சார்பு ஆபத்தாக உள்ளது. இது குறைவாக இருக்க வேண்டும். NBFC வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெறுகிறது. வங்கிகளின் கணக்கு புத்தகங்கள் வலுவாக உள்ளன, ஆனால் கடன் வழங்குவதற்கு முன், வங்கி மற்ற வங்கிகளுடன் NBFC இன் தாக்கத்தை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் ஒரு NBFC பல வங்கிகளில் கடன் பெறுகிறது.’ என்றார்.

NBFC -க்கள் நிதியளிப்பதற்கான வேறு வழியைக் கண்டறிய வேண்டும்.

கடன்கள் திரும்பி வருமா வராதா என்று யோசிக்காமல், சில குறுந்தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்குக் கடன் தருகின்றனர் என்று சக்திகாந்த தாஸ் கூறினார். இந்த உயர் வட்டி விகிதத்தை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி பல வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. மைக்ரோலெண்டர்கள் மீது ரிசர்வ் வங்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது, அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. கடன் மற்றும் வட்டியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அபாயங்கள் ஏற்படாமல் இருக்க, வங்கிகள் மற்றும் NBFC -களால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அல்காரிதம்களை மட்டுமே நம்பாமல், மாறும் காலத்திற்கே ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும்.’ என்று மைக்ரோலெண்டிங் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்  அறிவுரை வழங்கினார்.

மேலும் படிக்க | டிஏ மட்டுமல்ல, இந்த அலவன்சிலும் 3% ஏற்றம்: ஊழியர்களின் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News