NPS Partial Withdrawal Rules: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS ஒரு நீண்ட கால ஓய்வூதியத் திட்டமாகும். இது பணி ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகை மற்றும் ஓய்வூதிய பலனை வழங்குகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த ஆண்டு ஜனவரியில் என்பிஎஸ்ஸில் இருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி முதல் NPSல் இருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. சில சூழ்நிலைகளில், என்பிஎஸ் முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கில் (NPS Account) டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 25 சதவீதத்தை எடுக்கலாம் என்று இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூழ்நிலைகளில் NPS கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்


- சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் உட்பட குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணத்திற்காக NPS கணக்கிலிருந்து தொகையை எட்டுக்கலாம். 


- ஒரு வீட்டை வாங்குவதற்கு அல்லது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பகுதியளவு தொகையை எடுக்கலாம். ஆனால் உங்கள் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் ஏற்கனவே வீடு இருந்தால், வேறு வீடு வாங்க இந்த வசதியைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


- கடுமையான நோய்கள் காரணமாக, சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்குவதற்கும், சிகிச்சைச் செலவுகளுக்கும் பணம் எடுக்கலாம். 


- NPS கணக்கு வைத்திருப்பவர்களின் இயலாமை காரணமாக ஏற்படும் மருத்துவ மற்றும் பிற செலவுகளுக்கு பணம் எடுக்கலாம்.


- திறன் மேம்பாடு அல்லது வேறு எந்த சுய-மேம்பாட்டு நடவடிக்கைக்கான செலவினங்களுக்காகவும் பணம் பெறலாம்.


- வணிகம் அல்லது ஸ்டார்ட்-அப் -களை தொடக்க NPS கணக்கிலிருன்ய்து பணம் எடுக்கலாம். 


மேலும் படிக்க | Budget 2024, மோடி 3.0: தயாராகிறார் நிதி அமைச்சர்... பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?


பகுதியளவு தொகையை எடுப்பதற்கு தேவையான விஷயங்கள்


தேசிய ஓய்வூதிய முறையின் (National Pension System) கீழ், பகுதியளவு தொகையை எடுக்க, ​​அந்த நபர் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு NPS உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் எடுக்கப்படும் தொகை உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பைத் தவிர்த்து மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. முழு சந்தா காலத்திலும் அதிகபட்சமாக மூன்று முறைதான் பகுதியளவு தொகையை எடுக்க அனுமதிக்கப்படும். இப்படி மூன்று முறை எடுத்தால், இவற்றுக்கு இடையில், 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.


என்.பி.எஸ் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி? 


- NPS இன் கீழ் 25 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான தொகையைத் திரும்பப் பெற, முதலில் நீங்கள் NPS இன் ஏதாவது ஒரு அரசாங்க நோடல் ஏஜென்சிக்கும் சென்று சுய அறிவிப்பு படிவத்தை (Self Declaration Form) நிரப்ப வேண்டும். 


- இதில், பணம் எடுப்பதற்கான நோக்கத்தை குறிப்பிட வேண்டும். 


- இதற்குப் பிறகு, விண்ணப்பத்தை மத்திய பதிவு நிறுவனத்தில் (CRA) சமர்ப்பிக்க வேண்டும். 


- சரிபார்த்த பிறகு நிறுவனம் விண்ணப்பத்தை செயலாக்கும். 


- சந்தாதாரர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவருக்குப் பதிலாக மற்றொரு குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | ATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயரப்போகுது... உஷார் மக்களே, விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ