வெறும் ரூ.1000 முதலீட்டில் மாதம் ரூ.20,000 ஓய்வூதியம்! இந்த திட்டத்துல சேந்துருங்க!
என்பிஎஸ் திட்டத்தில் ஒருவர் மாதந்தோறும் ரூ. 2,500 முதலீடு செய்யும்பட்சத்தில் அவருக்கு 65 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் கிடைக்கும் ஓய்வூதியம் ரூ.52,000 ஆக இருக்கும்.
அரசாங்கத்தால் ஜனவரி மாதம் 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் லாபகரமானதாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்டுகிறது. இந்த திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது, அதன்பின்னர் மக்களின் நலன் கருதி 2009ம் ஆண்டு முதல் அனைவருக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் இந்த திட்டமானது முதலீட்டாளர்கள் வயதான காலத்தில் சிறந்த வருவாய் பெற்று வளமாக வாழ வழிவகை செய்கிறது. என்பிஎஸ் திட்டத்தில் இந்திய குடிமகன்கள் அல்லது இந்தியாவில் வசிப்பவர்கள் போன்றவர்கள் சேர்ந்து கொள்ளலாம், இதில் சேருபவர்களின் வயது 18 முதல் 70-க்குள் இருக்க வேண்டும். இந்த நீண்ட கால சேமிப்பு திட்டமானது மக்களுக்கு வயதான காலத்தில் நிதி தேவைகளை சமாளித்துக்கொள்ள நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க | SBI vs Post Office:எங்கு முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும்?
என்பிஎஸ் திட்டத்தில் முதலீட்டாளர் ஒருவர் 20 வயதில் சேர்ந்து மாதந்தோறும் ரூ.1,000 என்கிற கணக்கில் முதலீடு செய்ய தொடங்கினாள் அவர் ஓய்வு பெறும் வரை அவர் செலுத்திய மொத்த தொகை ரூ.5.4 லட்சமாக இருக்கும். ஆண்டுக்கு 10 சதவீத வருமானம் கிடைத்தால், மொத்த முதலீடு ரூ.1.05 கோடியாக உயரும், முதலீட்டாளர் 40 சதவீத கார்ப்ஸை வருடாந்திரமாக மாற்றினால், அதன் மதிப்பு ரூ.42.28 லட்சமாக இருக்கும். வருடாந்திர வீதம் 10 சதவீதம் எனில் மாத ஓய்வூதியம் ரூ.21,140 ஆக கிடைக்கக்கூடும், அதோடு முதலீட்டாளருக்கு சுமார் ரூ.63.41 லட்சம் மொத்தமாக கிடைக்கும். மாதந்தோறும் முதலீடு செய்யும் தொகை உயரும்போது ஓய்வூதியமும் அதிகமாக கிடைக்கும், மாதம் ரூ. 2,500 முதலீடு செய்தால், 65 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் கிடைக்கும் ஓய்வூதியம் ரூ.52,000 ஆக இருக்கும்.
என்பிஎஸ் கால்குலேட்டரை பயன்படுத்தி எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு தொகை இறுதியில் கிடைக்கும் என்பதை சரிபார்க்க முடியும். என்பிஎஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்த முதலில் https://www.npstrust.org.in/content/pension-calculator என்கிற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் உள்ளே நுழைந்தபின் உங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும், இப்போது நீங்கள் மாதம் எவ்வளவு தொகை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் எந்த வயதில் முதலீடு செய்ய தொடங்கப்போகிறீர்கள் என்கிற விவரத்தையும் அதில் உள்ளிட வேண்டும். முதலீடு மற்றும் வருடாந்திர வருவாயில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை உள்ளிடவும், அதன்பிறகு நீங்கள் மாதாந்திர ஓய்வூதியம், வருடாந்திர மதிப்பு மற்றும் மொத்தத் தொகை ஆகியவற்றைப் பார்க்க முடியும்.
மேலும் படிக்க | இந்த தொகை வரை UPI இல் RuPay கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ