புது தில்லி: திங்களன்று எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 94 டாலர் முதல் 96 வரை அதிகரித்து எண்ணெய் சந்தையில் பீதியைக் கிளப்பியது. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் சாத்தியக்கூறுகள், எரிசக்தி விநியோகம் சீர்குலைக்கப்படும் சாத்தியக்கூறுகள் என இவற்றைப் பற்றிய தகவல்கள் எண்ணெய் விலையில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களுக்கு வழி வகுத்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்றும், தாக்குதல் எதிர்பாராத ஒரு தருணத்திலும் நடக்கலாம் என்றும் அமெரிக்கா கூறியதை அடுத்து சந்தை ஸ்தம்பித்தது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அது, ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தூண்டக்கூடும் என அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய சக்திகள் எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் முக்கிய நாடாக ரஷ்யா விளங்குகிறது. ரஷ்யா ஈடுபடும் இராணுவ மோதல்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளை வெகுவாக பாதிக்கும். இந்த சந்தைகள் ஏற்கனவே இறுக்கமாக இருக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கைகள் மூலம் உலகளாவிய விநியோகத்தில் ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 


மேலும் படிக்க | முதலீட்டாளர்களை புரட்டிப்போட்ட பங்குச்சந்தை: சரிவின் முக்கிய காரணங்கள் இதோ 


சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா தலைமையிலான கிட்டத்தட்ட இரண்டு டஜன் நாடுகளை உள்ளடக்கிய OPEC+ என அழைக்கப்படும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு மாதமும் எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதாக அறிவித்து வருகிறது. ஆனால் OPEC+ உறுப்பினர்களில் சிலரால் தங்கள் உற்பத்தி ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்ய போதுமான அளவை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதன் விளைவாக விநியோகத் தாமதம் ஏற்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இராணுவ மோதல் ஏற்பட்டால், அப்போது, எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதற்கிடையில், எண்ணெய்க்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. நாடுகள் கோவிட் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. அதிக எரிபொருள் விலைகள் உலகெங்கிலும் உள்ள பல பொருளாதாரங்களில் பணவீக்கத்தைத் தூண்டியுள்ளன. மத்திய வங்கிகள் எளிதான பணவியல் கொள்கையைத் திரும்பப் பெறத் தொடங்குகின்றன.


இந்தியாவில், அரசு நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சில்லறை விலையை மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலையாக வைத்துள்ளன. இதற்கு 5 மாநிலத் தேர்தல்கள் காரணமாக இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், சர்வதேச விலைகளுடன் உள்நாட்டு விலைகளை சீரமைக்க கணிசமான உயர்வுகளை விரைவில் அரசு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சில்லறை விலையில் ஏற்படும் அதிகரிப்புகள் சரக்குகளின் விலைகளை அதிகரித்து பொருளாதாரத்தில் பரந்த பணவீக்கத்தைத் தூண்டலாம். இது எரிபொருளுக்கான வரியை குறைக்க அரசாங்கத்தை தூண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 


ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால், எண்ணெய் விலை மட்டுமல்லாமல் பிற விலைகளும் அதிகரிப்பைக் காண வாய்ப்புள்ளது. இதன் முக்கிய தாக்கம் தங்கத்தில் இருக்கக்கூடும். அமெரிக்க ஃபெடரல் வங்கிகள் மற்றும் டாலரின் நிலையை பெரிதும் சார்ந்துள்ள தங்க விலையில், இந்த விவகாரத்தால் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள். 
 
மேலும் படிக்க | ABG Shipyard மோசடி: திகைக்க வைக்கும் மோசடியில் சிக்கிய வங்கிகள் இவைதான் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR