முதலீட்டாளர்களை புரட்டிப்போட்ட பங்குச்சந்தை: சரிவின் முக்கிய காரணங்கள் இதோ

Stock Markets: இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மோசமான நாட்களில் ஒன்றாக நேற்றைய தினம் சரித்திரத்தில் இடம் பிடிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2022, 11:19 AM IST
முதலீட்டாளர்களை புரட்டிப்போட்ட பங்குச்சந்தை: சரிவின் முக்கிய காரணங்கள் இதோ title=

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மோசமான நாட்களில் ஒன்றாக நேற்றைய தினம் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். முதலீட்டாளர்களுக்கு பீதி ஏற்படுத்திய சந்தை நேற்று அதிகப்படியான நஷ்டத்தை சந்தித்தது. நேற்று இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. திங்களன்று மும்பை பங்குசந்தையான பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தையான ​​​​நிஃப்டி 17,000 நிலைக்கு கீழே விழுந்தது. 

பிப்ரவரி 26, 2021க்குப் பிறகு இதுவே சந்தைகளின் மிகப்பெரிய ஒற்றை நாள் வீழ்ச்சியாகும். இதேபோல், என்எஸ்இ நிஃப்டி இந்த ஆண்டு முதல் முறையாக முக்கிய அளவான 17,000-க்கு கீழே முடிந்ததும் இதுவே முதன் முறையாகும்.

அனைத்து 19 பிஎஸ்இ துறை குறியீடுகளும் நஷ்டத்தை சந்தித்தன. ரியல் எஸ்டேட், மெட்டல் மற்றும் வங்கித் துறைகள் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன. ஸ்மால்கேப், மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் குறியீடுகள் 4.15 சதவீதம் வரை சரிந்தன.

திங்களன்று முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8.47 லட்சம் கோடிக்கு மேல் இறக்கத்தைக் கண்டது. இரண்டு நாட்களில் முதலீட்டாளர்கள் ரூ.12.38 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2,55,42,725.42 கோடியாக உள்ளது.

மேலும் படிக்க | ABG Shipyard மோசடி: திகைக்க வைக்கும் மோசடியில் சிக்கிய வங்கிகள் இவைதான் 

சந்தைகளில் ஏற்பட்ட களேபரத்துக்கான முக்கிய ஐந்து காரணங்கள் இதோ 

- உக்ரைன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் எண்ணெய் விலைகளை உயர்த்தியது. இது, முதலீட்டாளர்கள் தாங்கள் ஆபத்தாக கருதும் இருப்புகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் தீவிரமான பதட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. உக்ரைன் விவகாரம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட நிலையான அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய சந்தைகளுக்கு ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 

- ரூபாய் மதிப்பபில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் வெளியேற்றம் ஆகியவையும் மிகப்பெரிய காரணங்களாக கருதப்படுகின்றன. 

- மத்திய வங்கியின் அவசர கூட்டத்திற்கு முன்னதாக முதலீட்டிற்கான ஆபத்து உணர்வு மேலும் அதிகரித்தது. இது ஆக்ரோஷமான பண இறுக்கம் பற்றிய அச்சத்தை அதிகப்படுத்தியது.

- உள்நாட்டில், ஆண்டுக்கான WPI பணவீக்கம் டிசம்பரில் 13.56 சதவீதத்தில் இருந்து ஜனவரியில் 12.96 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், எரிபொருள் மற்றும் மின்சார விலைகளின் மிதமான நிலைக்கு மத்தியில் இது இன்னும் அதிகமாகவே உள்ளது.

- ஆசியாவின் மற்ற நாடுகளைப் பற்றி பேசுகையில், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சத்தில்,  பங்குச்சந்தைகள் பெரிய சரிவை எதிர்கொண்டன. இதனால் எண்ணெய் விலைகளும் உயர்ந்தன. பிற்பகல் அமர்வில் ஐரோப்பா சந்தைகளும் கடும் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி Ponzi திட்டங்களை விட மோசடியானது: RBI துணை கவர்னர் 

Trending News