சென்னை: இந்தியாவில் ஓலா (Ola) நிறுவனம் மிகப் பெரிய ஈ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை நிறுவவிருக்கிறது. இரு விநாடிகளில் ஒரு ஸ்கூட்டர் என்ற ஆண்டுதோறும் 10 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் இந்தத் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2020 டிசம்பரில் ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் அமையும்.


இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஓலா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் அமையவிருக்கும் தொழிற்சாலை எப்படி இருக்கும் என்ற சித்தரிப்பு காட்சிகள் இந்த வீடியோவில் அனிமேஷனில் காட்டப்பட்டுள்ளன.



போக்குவரத்து சேவைகளுக்கு பிரபலமான ஓலா நிறுவனத்தின் இந்த முயற்சி தமிழகத்தில் பலரின் வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். 2022-க்குள் இந்த ‘ஓலா ஃபியூச்சர் ஃபாக்டரி’ செயல்படத் தொடங்கும் என்று நிறுவனம் நம்புகிறது.  


2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஜனவரி மாதத்திலேயே நிலம் கையகப்படுத்தல் முடிந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் தொழிற்சாலையை செயல்படுத்துவதற்கான திட்டம் தொடங்கப்படும் என்று ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.


Also Read | சேலையை இப்படியும் விளம்பரப்படுத்த முடியுமா? Super Idea


இந்த தொழிற்சாலையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (e-scooter) விரைவில் சாலைகளில் காணலாம். இந்தியா மற்றும் ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆசியா பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என சர்வதேச சந்தைகளில் ஓலாவின் ஸ்கூட்டர்கள் நன்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. 


தமிழகத்தில் தயாராகும் ஈ-ஸ்கூட்டர்கள், உலகளவில் பல நாட்டின் சாலைகளிலும் இயங்கும். இந்த மின்சார ஸ்கூட்டரில் அகற்றக்கூடிய பேட்டரி, உயர் செயல்திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கும்.  இந்த ஸ்கூட்டரின் வடிவமைப்பிற்காக ஓலா நிறுவனம் பல விருதுகளை வென்றுள்ளது.  


Also Read | Maha Shivratri 2021: தேதி, பூஜை நேரம், முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR