சிவராத்திரி என்ற சொல் இரண்டு சொற்களின் இணைப்பாகும், சிவன் + ராத்திரி என்ற இரு சொற்களை இணைத்து சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானின் சிறந்த இரவு என்று பொருள்.
சிவன் மற்றும் சக்திகளின் சக்தி சங்கமமாக மகா சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி என்ற சொல் இரண்டு சொற்களின் இணைப்பாகும், சிவன் + ராத்திரி என்ற இரு சொற்களை இணைத்து சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மகா சிவராத்திரி என்றால் சிவபெருமானின் சிறந்த இரவு என்று பொருள்.
இந்து மதத்தின் சைவ மத மரபுக்கு மகா சிவராத்திரி முக்கியமானது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்தசியில் சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது.
புராணங்களின்படி, மகா சிவராத்திரியின் நள்ளிரவில், சிவன் லிங்க வடிவில் தோன்றினார், இதனால், சிவபெருமானின் பிறந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவன் நிகழ்த்திய நடனத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாள் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி புனித பண்டிகை மார்ச் 11 வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும்.
சதுர்தசி திதி மார்ச் 11 அன்று பிற்பகல் 2:39 மணிக்கு தொடங்கி மார்ச் 12 அன்று மாலை 3:02 மணிக்கு முடிகிறது. சிவராத்திரியன்று இரவு பூஜை நேரம் மார்ச் 12 அன்று நள்ளிரவு 12:06 மணி முதல் 12:55 மணி வரை. சிவராத்திரி பாரணை நேரம் மார்ச் 12 அன்று 6:34 AM முதல் 3:02 PM வரை
சிவபெருமானின் ஆசியை பெறுவதற்கு, பக்தர்கள் கடுமையான விரதத்தைக் கடைப்பிடித்து, சிவபெருமானுக்கான பூஜைகளையும் அபிஷேகங்களையும் செய்கின்றனர்.
மகாசிவராத்திரியில், பக்தர்கள் புனித கங்கை நதியில் நீராடி, சிவன் கோயில்களுக்குச் சென்று சிவபெருமானுக்கு பால், பழங்கள், வில்வ இலையை படைத்து வணங்குகின்றனர். சிவராத்திரி விரதம் மிகவும் புராதனமானது, பண்டைய காலங்களிலிருந்தே நடைமுறையில் உள்ளது. லட்சுமி, இந்திராணி, சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி, சீதா, பார்வதி, ரதி ஆகியோரும் சிவராத்திரி நோன்பைக் கடைப்பிடித்ததாக வேதங்கள் கூறுகின்றன. மகாசிவராத்திரியில், திருமணமாகாத பெண்கள் உண்ணாவிரதம் இருந்தால், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.