Old Age Pension: ஓய்வூதியம் என்பது முதியவர்களுக்கான முக்கிய வருமான ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. வயதான காலத்தில் அவர்கள் தங்களுக்கான செலவுகளுக்காக பிறரை அதிகம் சார்ந்திராத வண்ணம் இது அவர்களை காக்கின்றது. மத்திய அரசும் மாநில அரசுகளும் முதியோர் நலனுக்காக அவ்வப்போது பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்கிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரு மாநில அரசு அதன் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எஸ்சி (SC), எஸ்டி (ST), ஓபிசி (OBC) மற்றும் பழங்குடியின மக்களுக்கு (Tribal people) ஒரு பெரிய பரிசை அறிவித்துள்ளார். இந்த வகைகளில் உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பு விரைவில் 60 வயதிலிருந்து 50 ஆக குறைக்கப்படும் என்று அவர் கூறினார். அரசின் நான்காம் ஆண்டு விழாவையொட்டி ராஞ்சியில் உள்ள மொர்ஹபாடி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சோரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்கள் அண்டை மாநிலங்களான பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) மாதந்தோறும் ரூ.250 முதல் ரூ.300 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலத்தில் 1000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது" என்றார். 


அரசு பணி நியமனக் கடிதத்தையும் வழங்கியது


ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "நாங்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று பழங்குடியினர் மற்றும் தலித் சமூகத்தின் பயனாளிகளின் ஓய்வூதிய வயது வரம்பை 50 ஆகக் குறைக்கிறோம். தற்போது யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் (Universal Pension Scheme) அரசால் நடத்தப்படுகிறது. இதன் கீழ், மூத்த குடிமக்கள் (Senior Citizens), மாற்றுத்திறனாளிகள் (Differently Abled), ஒற்றைப் பெண்கள் (Single Women) மற்றும் விதவை பெண்களுக்கு (Widows) மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில், ​​662 ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன. இது தவிர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 300 -க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 4500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.


மேலும் படிக்க | Discard Return என்றால் என்ன? வருமான வரித்துறை அளித்துள்ள மிகப்பெரிய வசதி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


பயனாளிகளின் எண்ணிக்கை 36 லட்சமாக உயர்ந்துள்ளது


முதலமைச்சர் ஓய்வூதியத் (Pension) திட்டத்தில் செய்த மாற்றங்களின்படி, மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் மற்றும் தலித்துகள் 50 வயதை எட்டியவுடன் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இந்த முடிவை எடுத்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய மாநில அரசாங்கம் (State Government), இந்த சமூகத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை என்றும் கூறியது. 2000 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவான பிறகு, 20 ஆண்டுகளில் 16 லட்சம் பேர் மட்டுமே ஓய்வூதியப் பலன்களைப் பெற்றதாக சோரன் கூறினார். ஆனால் அவரது அரசு பயனாளிகளின் எண்ணிக்கையை 36 லட்சமாக உயர்த்தியுள்ளது. இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.


ஜார்க்கண்டில் தற்போதைய ஓய்வூதியத் திட்டம்


பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்காக ஜார்க்கண்ட் அரசால் உலகளாவிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் (Pension Benefits) வழங்கப்படுகிறது. இதன் கீழ் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர, முதியோர்களின் வயது 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அதே நேரத்தில், விதவையின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய, தேவைப்படுபவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னரே தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: 2 புத்தாண்டு பரிசுகள்... DA, HRA இரண்டும் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ