ஆன்லைன் விளம்பர விற்பனையில் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் கூட்டுச் சேர்ந்ததாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேஸ்புக் மற்றும் கூகுள்  தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து, தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முறியடித்ததாக டெக்சாஸ் மற்றும் 15 பிற மாநிலங்கள் புகார் செய்துள்ளன. 


ஏலத்தை எதிர்ப்பதற்கான கூகுளின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது, கூகுள் மற்றும் பேஸ்புக் வலைத்தளங்களில் வரும் விளம்பரத்திலிருந்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்தத்தை மீறியதாக புகாரில் கூறபட்டுள்ளது.


"இந்த கண்டுபிடிப்பு அதன் பரிமாற்றத்தில் 19 முதல் 22 சதவீதத்தை கோரும் திறனை கணிசமாக அச்சுறுத்துகிறது என்பதை கூகுள் உணர்ந்தது, இது அனைத்து விளம்பர பரிவர்த்தனைகளையும் குறைக்கிறது" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. 


"ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கூகுள் பேஸ்புக் தகவல், வேகம் மற்றும் பிற நன்மைகளை வழங்கியது. அதற்கு பதிலாக ஏலத்தை Facebook குறைத்தது."


ALSO READ | Vivo-வின் இரண்டு அசத்தலான போன்கள் 


Meta Platforms Inc ஆக மாறியுள்ள Facebook, இந்த ஒப்பந்தம் கூகுளுக்கு மட்டும் பிரத்யேகமானதல்ல என்றும் மற்ற ஒப்பந்தங்கள் விளம்பரம் இடுவதற்கான போட்டியை அதிகரித்துள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "வெளியீட்டாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் போது" விளம்பரதாரர்களுக்கு இது சிறந்தது என்று அது கூறியது.


ஃபேஸ்புக்கின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் (Sheryl Sandberg), ஜூக்கர்பெர்க்கை உள்ளடக்கிய ஒப்பந்தம் பற்றி 2018 மின்னஞ்சல் மூலமாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், "இது மூலோபாய ரீதியாக ஒரு பெரிய விஷயம்" என்று வெளிப்படையாகக் அவர் தெரிவித்திருந்தார்.


"கையொப்பமிட நாங்கள் தயாராக இருக்கிறோம், மேலும் முன்னேற உங்கள் ஒப்புதல் தேவை" என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. ஜுக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) ஒரு முடிவை எடுப்பதற்கு முன் சாண்ட்பெர்க் மற்றும் அவரது மற்ற நிர்வாகிகளை சந்திக்க விரும்பினார், என்று இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.  


இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஷோட்டன்ஃபெல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கு "தவறுகள் நிறைந்தது மற்றும் சட்டப்பூர்வ தகுதி இல்லாதது" என்று கூறினார்.


ALSO READ | பிரத்யேகமான ஸ்டிக்கரை வாட்ஸ்அப்பில் உருவாக்க சுலப வழி


அதேபோல், மெட்டா செய்தித் தொடர்பாளர் கிறிஸ் ஸ்க்ரோ வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்குப் பற்றி கூறுகையில், கூகுள் உடனான நிறுவனத்தின் விளம்பர ஏல ஒப்பந்தம் மற்றும் பிற ஏல தளங்களுடன் இது போன்ற ஒப்பந்தங்கள் "விளம்பரக் காட்சிகளுக்கான போட்டியை அதிகரிக்க உதவியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.


"இந்த வணிக உறவுகள் விளம்பரதாரர்களுக்கு அதிக மதிப்பை வழங்க மெட்டாவை செயல்படுத்துகின்றன, அதே நேரத்தில் வெளியீட்டாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குகின்றன, இதன் விளைவாக அனைவருக்கும் சிறந்த முடிவுகள் கிடைக்கும்" என்று ஸ்க்ரோ கூறினார்.


நிறுவனங்களின் உத்திகள் நட்டத்தை ஏற்படுத்துவதாக இதுபோன்ற வழக்குகளை மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தொடர்வது தொடர்கிறது.


ALSO READ | Password-ஐ ஹேக் செய்ய சில நொடிகள் போதும்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR