Post Office vs SBI: எந்த FD திட்டத்தில் சீக்கிரம் பணம் டபுளாகும்? - ஈஸியா கணக்கு போடலாம்!
FD Interest Rate Calculator: FD திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், தங்களின் முதலீட்டு பணம் இரட்டிப்பாகும் காலம் குறித்து எப்படி தெரிந்துகொள்வது என்பதையும், அதன் கணக்கீடு செய்யும் முறையையும் இங்கு காணலாம்.
FD Interest Rate Calculator: நிலையான வைப்புத்தொகை திட்டம் (FD Scheme) என்பது அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கி இரண்டிலும் இயங்கும் ஒரு திட்டமாகும். இதில் உங்களுக்கு உத்தரவாதமான வட்டி கிடைக்கும், அதே போல் உங்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த காரணத்திற்காகவே, பலரும் FD திட்டத்தை முதலீட்டிற்கான சிறந்த வழிமுறையாக கருதுகின்றனர். நீங்கள் அஞ்சலகத்தில் FD திட்டத்தைத் தொடங்கினால், 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான FD ஆப்ஷன்கள் இங்கே கிடைக்கிறது. மேலும், அதன் வட்டி விகிதங்களும் ஆண்டுக்கு ஏற்ப மாறுபடும். மறுபுறம், நீங்கள் ஒரு வங்கியில் FD திட்டத்தை தொடங்கினால், இங்கேயும் நீங்கள் வெவ்வேறு கால அளவு FD-இன் ஆப்ஷனை பெறுவீர்கள். வட்டியும் காலத்துக்கு ஏற்ப மாறுபடும்.
ஆனால் FD மூலம் முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக்க விரும்பினால், நீண்ட காலத்திற்கு அதில் முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக, குறைந்த மற்றும் அதிகமாக இருக்கும் வட்டி விகிதத்தைப் பார்த்து மக்கள் இந்த கணக்கீட்டை செய்கிறார்கள். எங்கு முதலீடு செய்வது நன்மை பயக்கும், உங்கள் முதலீடு எந்த நேரத்தில் இரட்டிப்பாகும் ஆகியவற்றை கணக்கிடுவது அந்த அளவிற்கு எளிதானது அல்ல. எந்த நேரத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்பதை நீங்கள் எளிதாக யூகிக்கக்கூடிய ஒரு சூத்திரத்தை உங்களுக்கு இங்கு சொல்கிறோம்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேக்கு வருமானத்தை அள்ளி தரும் ‘5’ ரயில்கள் இவை தான்..!!
அந்த பார்முலா என்ன?
இதை நிதி வல்லுநர்கள் Rule 72 என்று அழைக்கிறார்கள் மற்றும் முதலீட்டின் பார்வையில் இது மிகவும் முக்கியமானது என்றும் கருதுகின்றனர். இந்த ஃபார்முலா மூலம், சரியான கணக்கீட்டை அதிக அளவில் செய்து, உங்கள் முதலீடு எத்தனை நாட்களில் இரட்டிப்பாகும் என்பதை அறியலாம். கணக்கிடுவதும் மிகவும் எளிது.
ஒரு திட்டத்தை பயன்படுத்துவதற்கு நீங்கள் பெறும் வருடாந்திர வட்டியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் அந்த வட்டியை 72 ஆல் வகுக்க வேண்டும். இது உங்கள் பணம் எந்த நேரத்தில் இரட்டிப்பாகும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.
அஞ்சல் அலுவலக FD
அஞ்சல் அலுவலக FD-இல் முதலீடு செய்வது பற்றி பேசுகையில், ஒரு வருட FDக்கு 6.9 சதவீத வட்டியும், இரண்டு மற்றும் மூன்று வருட FD-க்கு 7 சதவீத மற்றும் 5 வருட FD-க்கு 7.5 சதவீத வட்டியும் கிடைக்கும். நீங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்புவதால், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். அதன்படி, நீண்ட FD திட்டம் என்பது 5 ஆண்டுகள் ஆகும், அதன் வட்டி 7.5 சதவீதம் ஆகும். பார்முலாவின்படி, 72/7.5 = 9.6 அதாவது 9 ஆண்டுகள் 6 மாதங்களில் உங்கள் தொகை இரட்டிப்பாகும். இந்த வழியில், நீங்கள் தொகையை இரட்டிப்பாக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு FD திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
எஸ்பிஐ FD
எஸ்பிஐ இல், நீங்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான FD திட்டத்தை பெற்றால், உங்களுக்கு 7 சதவிகிதத்தில் வட்டி கிடைக்கும். மறுபுறம், நீங்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் FD திட்டத்தை பெற்றால், உங்களுக்கு 6.5 சதவீத வட்டி கிடைக்கும். நீண்ட கால முதலீடாக இருந்தால் கணக்கீடும் 6.5 சதவீத வட்டி விகிதத்தில் மட்டுமே செய்யப்படும். இந்த வழக்கில் 72/6.5 = 11.07 என்பது சுமார் 11 ஆண்டுகளில் உங்கள் தொகை இரட்டிப்பாகும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் எவ்வளவு? 3% அல்லது 4%? இதன் பின் உள்ள கணக்கீடு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ