இதில் முதலீடு செய்தால் லாபம் பெருகும்... FD வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கி!

Axis Bank FD Interest Rate: ஆக்சிஸ் வங்கி தனது சில நிலையான வைப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 18, 2023, 07:14 AM IST
  • புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 17 முதல் அமலுக்கு வந்தது.
  • முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 7.95 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
  • மூத்த குடிமக்களுக்கும் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது.
இதில் முதலீடு செய்தால் லாபம் பெருகும்... FD வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கி! title=

Axis Bank FD Interest Rate Updates: ஆக்சிஸ் வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைகளுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டங்களின் வட்டி விகிதத்தில் 10 bps அதிகரிப்பை அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 7.95 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

ஆக்சிஸ் வங்கி சில காலங்களின் நிலையான வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து, அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் ஈட்ட வாய்ப்பளிக்கிறது. ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான FD வட்டி விகிதத்தை 10 bps உயர்த்துவதாக வங்கி அறிவித்துள்ளது.

வங்கியின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 17ஆம் தேதி, அதாவது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு 3.5 சதவீதம் முதல் 7.20 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. இனி ரயிலில் இந்த சிறப்பு வசதி வழங்கப்படும்

திரும்பப் பெறுவதற்கான அபராதம்

ஆக்சிஸ் வங்கியின் இணையதளத்தின்படி, 1.0 சதவீதம் அபராதத்துடன் முதிர்வுக்கு முன் FD திட்டத்தில் இருந்து எளிதாகப் பணத்தை எடுக்கலாம்.

வட்டி விகிதங்கள்

ஆக்சிஸ் வங்கியின் கூற்றுப்படி, 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு 3.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேசமயம், 46 முதல் 60 நாட்களில் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு, வட்டி விகிதம் 4.00 சதவீதமாக உள்ளது. ஆக்சிஸ் வங்கி 61 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரையிலான முதிர்ச்சியுடன் கூடிய FD திட்டங்களுக்கு 4.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதேபோல், 3 மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 4.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், 6 முதல் 9 மாதங்களில் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 5.75 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 9 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 6.00 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
 
ஒரு வருடம் அல்லது ஒரு வருடம் மற்றும் நான்கு நாட்களில் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தையும், ஒரு வருடம் 5 நாட்கள் முதல் 13 மாதங்களில் முதிர்ச்சியடையும் FD திட்டங்களுக்கு 6.80 சதவீத வட்டி விகிதத்தையும் ஆக்சிஸ் வங்கி வழங்குகிறது. 13 மாதங்கள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான FD திட்டங்களுக்கு வங்கி 7.10 சதவீத வட்டி அளிக்கிறது. இருப்பினும், வங்கி இப்போது 16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் வட்டி விகிதத்தை 10 bps அதிகரித்து 7.20% ஆக உயர்த்தியுள்ளது, இது ஆக்சிஸ் வங்கி வழங்கும் உச்சபட்ச வட்டி விகிதமாகும். அதே நேரத்தில், ஆக்சிஸ் வங்கி 2 ஆண்டுகள் முதல் 30 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.05 சதவீத வழங்குகிறது.

ஆக்சிஸ் வங்கியமூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள்

ஆக்சிஸ் வங்கியின் கூற்றுப்படி, மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு 3.50 சதவீதம் முதல் 7.95 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 16 மாதங்கள் முதல் 17 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு அதிகபட்சமாக 7.95 சதவீதம் வட்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ITR Filing: அதிகபட்ச பணத்தை திரும்ப பெற... இந்த 5 எளிய வழியை தெரிந்துகொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News