Business Opportunity: தபால் அலுவலக உரிமம் ஆன்லைனில் பொருந்தும்: உங்கள் பட்ஜெட் குறைவாக இருக்கிறது, குறைந்த பணத்தில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு சிறந்த திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்களானால், இங்கே உங்களுக்கான செய்தியாகும். இந்திய அஞ்சல் துறையில் இருக்கும் இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம். இந்திய அஞ்சல் துறை திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்தால், அது முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், நீங்கள் 5,000 ரூபாயை மட்டுமே செலவழித்து திட்டத்தில் சேரலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது:
நாட்டில் தற்போது சுமார் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் (Post Office) உள்ளன. தங்கள் கணக்குகளை தபால் நிலையங்களில் திறக்க பொதுமக்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கிராமங்களிலும் தபால் அலுவலகம் திறக்க வேண்டும் அரசு முயற்சித்து வருகிறது. கடந்த காலம் முதல் தற்போது வரை ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் தபால் அலுவலகம் முக்கிய பங்காற்றி வருகிறது. ரூ .5000 க்கு நீங்கள் எப்படி ஒரு தபால் அலுவலகர் உரிமையை எடுக்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். தபால் அலுவலகம் தற்போது இரண்டு வகையான உரிமைகளை வழங்குகிறது. முதலாவது அவுட்லெட் உரிமை (Outlet Franchise), இரண்டாவது தபால் முகவர்கள் உரிமை (Postal Agents Franchise) ஆகும். இந்த இரண்டு உரிமைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுக்கலாம்.


ALSO READ | ஒவ்வொரு மாதமும் ரூ. 2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால் லட்சங்கள் பெறலாம்! முழு விவரம்


ஒரு தபால் அலுவலக உரிமையாளருக்கான தகுதி என்ன?
தபால் அலுவலகத்தைத் திறப்பது என்பது இடம் மிகவும் முக்கியமானது, நினைத்த இடங்களில் திறக்க முடியாது.  அதேநேரத்தில் சாத்தியமில்லாத பல இடங்களுக்கு சேவையை கொண்டு செல்லவேண்டும். இதற்காக, தபால் அலுவலகம் சேவையை வழங்குகிறது, தபால் நிலையத்தின் சேவையை வீட்டுக்கு வீடு கொண்டு செல்ல முகவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் தபால் முகவர்கள் உரிமையாளர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பணியில் சேர சில நிபந்தனைகள் உள்ளன. உங்களுக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அதே சமயம், நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 வது தேர்ச்சி பெற்ற சான்றிதழ் அவசியம். இதற்காக நீங்கள் 5000 ரூபாய் செலவிட வேண்டும்.


பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ .5000:
ஒரு தபால் அலுவலக உரிமையாளர் உரிமம் பெற, நீங்கள் 5000 ரூபாய் பாதுகாப்பு வைப்புத்தொகையை (Security Deposit) செலுத்த வேண்டும். நீங்கள் உரிமையைப் பெற்றவுடன், அதன் பிறகு உங்கள் வேலைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட கமிஷன் உங்களுக்கு வழங்கப்படும். இது ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாயாக இருக்கலாம். வீட்டுக்கு வீடு தபால் முகவராக மாறுவதன் மூலம், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு தபால் அலுவலகத்திலிருந்து கிடைக்கும் பல வசதிகளை நீங்கள் வழங்கலாம். 


ALSO READ | தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளதா இதோ உங்களுக்காக பல்வேறு வசதிகள்.!


உரிமையாளருக்கான படிவம் நிரப்பப்பட வேண்டும்:
வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக உரிமையைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க, நீங்கள் indiapost இன் அதிகாரப்பூர்வ தளத்தில் அதாவது இந்த இணைப்பை கிளிக் செய்யலாம் (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf). இங்கிருந்து நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிமைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து மக்களும் அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR