Electricity connection வாங்க இனி 2 ஆவணங்கள் இருந்தால் போதும்! நுகர்வோருக்கு கிடைக்கிறது புதிய `சக்தி`
மின்சார நுகர்வோரின் உரிமைகளுக்காக அரசாங்கம் புதிய விதிகளைத் உருவாக்கியுள்ளது. மின்சாரம் நுகர்வோர் இருப்பதால் மட்டுமே இது மின்துறை இருக்கிறது என்று அரசாங்கம் கூறுகிறது...
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள மின்சார நுகர்வோருக்கு புதிய 'சக்தி' கிடைக்கவிருக்கிறது. முதல் முறையாக, மின்சார நுகர்வோரின் உரிமைகளுக்காக அரசாங்கம் புதிய விதிகளைத் உருவாக்கியுள்ளது. மின்சாரம் நுகர்வோர் இருப்பதால் மட்டுமே இது மின்துறை இருக்கிறது என்று அரசாங்கம் கூறுகிறது. நாட்டின் குடிமக்களுக்கு மின்சாரம் வழங்கிய பிறகு, அரசு தற்போது, அவர்களுக்கு திருப்தி அளிக்கும், உரிமைகள் அளிக்கும் விஷயங்களை நோக்கி கவனத்தைத் திருப்பியுள்ளது.
எனவே, சேவைகளின் தரம் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். எனவே, Electricity (Rights of Consumers) Rules, 2020 எனப்படும், மின்சாரம் (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவின் கீழ் பல வகையான வசதிகள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மின்வெட்டுக்களில் வெளிப்படைத்தன்மை
புதிய வரைவின் படி, மின் விநியோக நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மின் நுகர்வோருக்கு சராசரி மின்வெட்டு எவ்வளவு என்பதையும் அது எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்ற காலக்கெடுவையும் தீர்மானிக்க வேண்டும்.
மின் இணைப்பைப் பெறுவது இனிமேல் சுலபம்...
1. 10 kW (10 கிலோவாட்) அளவிலான மின்சார இணைப்பைப் பெறுவதற்கு இரண்டு ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும், 150 kW (150 கிலோவாட்) வரை பயன்படுத்தும்போது, demand charge கோரப்படாது. இதனால் அதிகமான மக்கள் மின்சார இணைப்புகளைப் பெற முடியும்
2. மெட்ரோ நகரங்களில் 7 நாட்களில் புதிய மின்சார இணைப்பு கொடுக்கப்படும், மற்ற நகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் 15 நாட்களிலும் கிராமப்புறங்களில் 30 நாட்களிலும் மின்சார இணைப்பைப் பெறலாம்.
மின்சார நுகர்வோருக்கு புதிய 'சக்தி' கிடைக்கும்
1. 60 நாட்களுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயிக்கப்படும் முறையின் கீழ் வரும் வாடிக்கையாளருக்கு 2 முதல் 5% வரை தள்ளுபடி கிடைக்கும்.
2. பணம், காசோலை, டெபிட் கார்டு அல்லது net banking மூலம் மின்சார கட்டணத்தை செலுத்தலாம், ஆனால் 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
3. மின்சார இணைப்பை துண்டிப்பது, மீண்டும் இணைப்புப் பெறுவது, மின்சர மீட்டர் மாற்றுவது, பில்லிங் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான விதிகள் எளிமையாக்கப்படும்
4. வாடிக்கையாளருக்கான சேவைகள் தாமதத்திற்கு மின் விநியோக நிறுவனங்களுக்கு அபராதம்/இழப்பீடு விதிக்கப்படும். அந்தத் தொகையானது நேரடியாக மின்கட்டண பில்லுடன் இணைக்கப்படும்
5. மின்சார நுகர்வோருக்கு என பிரத்யேக 24x7 கட்டணமில்லா மையம் செயல்படும். புதிய இணைப்பைப் பெற, இணைப்பை துண்டிக்க, இணைப்பை மாற்ற மொபைல் செயலி (Mobile app) தொடங்கப்படும். பெயரை மாற்றம், மின்சாரத்திற்கான load அளவை மாற்றுவது, மீட்டரை மாற்றுவது என பலவிதமான சேவைகளையும் இந்த செயலியின் மூலமே சுலபமாக பெற்றுக்க் கொள்ளலாம். மூலம் செய்யப்படலாம்.
வரைவு மசோதா குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் செப்டம்பர் 30 வரை பெறப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பரிந்துரைகளுக்குப் பிறகு மின் அமைச்சகம் விதிமுறைகளை இறுதி செய்யும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR