நியூடெல்லி: நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான  காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. ஆதார் அட்டையுடன், நிரந்தர கணக்கு எண்ணை 2023 ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் உங்கள் PAN கார்டு அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து வேலைச் செய்யாது என அறிவிக்கப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மக்களின் வசதிக்காக, சில வழிகாட்டுதல்களையும் விளக்கத்தையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. PAN எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு பல முறை நீட்டித்திருந்த நிலையில், இன்னும் இலட்சக்கணக்கானவர் இணைக்கவில்லை. 


பான் எண்ணை ஆதாருடன் (Aadhaar Card) இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆயிரக்கணக்கானவர்கள், ஒரே நேரத்தில் நுழைய முற்பட்டதால், பணம் செலுத்தும் சலான் மற்றும் இரண்டு ஆவணங்களை இணைக்கும் போது பலர் சிக்கல்களை எதிர்கொண்டனர். மக்களின் எதிர்பார்ப்புகளின்படி, வரித் துறை காலக்கெடுவை நீட்டிக்கவில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை முதல் ஊதியத்தில் பம்பர் ஏற்றம்... நாளை வரும் குட் நியூஸ்


பான் எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்புவோர் மற்றும் பணம் செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டவர்களுக்கு வருமான வரித்துறை உதவிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.




"பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! ஆதார்-பான் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பான் வைத்திருப்பவர்கள் சலானைப் பதிவிறக்குவதில் சிரமத்தை எதிர்கொண்ட சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது சம்பந்தமாக, சலான் செலுத்துதலின் நிலையை சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | இந்த மாதம் 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை! இணையத்திலும் சேவைகள் கிடைக்காது!


வரித்துறையின் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு போர்ட்டலின் ’இ-பே வரி' (‘e-pay tax’ ) டேப்பில், பணம் செலுத்துதல் வெற்றிகரமாக இருந்தால், பான் வைத்திருப்பவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையைத் தொடரலாம்" என்று வரித்துறை வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான சலான் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என ஐடி துறை மேலும் தெரிவித்துள்ளது. "மேலும், பான் வைத்திருப்பவர் வெற்றிகரமாகப் பணம் செலுத்தியவுடன், சலான் நகல் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஏற்கனவே பான் வைத்திருப்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


30.06.2023 வரை கட்டணம் செலுத்தி, இணைப்புக்கான ஒப்புதல் பெறப்பட்டாலும், 30.06.2023 வரை இணைக்கப்படாத சந்தர்ப்பங்களில், அத்தகைய வழக்குகள் முறையாகப் பரிசீலிக்கப்படும்" என்று வரித்துறைதெரிவித்துள்ளது.


சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்கள், சலான் நகலுக்கு தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலைச் சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உதவி தேவைப்பட்டால், உங்கள் விவரங்களை (PAN மற்றும் உங்கள் மொபைல் எண்ணுடன்) orm@cpc.incometax.gov.in இல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளளும்ம்" என்று வரித்துறை கூறியது.


 மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... இனி இரட்டிப்பு பலன்!


முதலில் பான் – ஆதார் (PAN - Aadhaar) இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2021 என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கடைசி நேரத்தில் பலரும் இணைக்க முயற்சி செய்து இணைய சேவையகம் முடங்கியதை அடுத்தும் மீண்டும் இதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 


பான் - ஆதார் இணைப்பு சுலப வழி


1. https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும்
2. அதில் கீழே ஸ்கிரோல் செய்து, போர்ட்டலின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘Link Aadhaar’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. பிறகு புதிய வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
4. அடுத்து, உங்கள் பான், ஆதார் எண், பெயர் மற்றும் மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்
5. அனுமதி தேவைப்படும் பெட்டிகளைக் குறிக்கவும். முடிந்தவுடன் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்
6. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க OTP ஐ உள்ளிட்டு, இணைக்கும் செயல்முறையைத் தொடங்கவும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ