அனைத்து பான் கார்டுகளையும் ஆதார் உடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 18 கோடி பேர் இன்னும் ஆதார்- பான் அட்டையை இணைக்கவில்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இதற்கான கடைசி தேதி 2021 மார்ச் 31ம் தேதி. எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாக இணைத்து விடுங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு எண்  (PAN) மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியான மார்ச் 31 க்குள் நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செல்லாததாகி விடும். 


அது மட்டுமல்ல, நீங்கள் அபராதமாக ரூ.10,000 செலுத்த நேரிடும்.


அபராதம் விதிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள்:


வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272 பி இன் கீழ், பயன்பாட்டில் இல்லாத பான் கார்டை இணைப்பதற்கு  ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு தொடர்பான தவறான தகவல்களை வழங்கினால், ரூ .10,000 அபராதம் விதிக்கப்படுவதாக வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் தெரிவித்திருந்தார். மேலும், சில பரிவர்த்தனைகளில், பான் அட்டை (PAN CARD)  தொடர்பான தகவல்களை நிரப்புவது கட்டாயமாகும், அங்கு பான் அட்டை விவரங்களை வழங்காததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.


முறையாக பான் கார்டு ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோர் சிக்கல்களை சந்திக்க நேரிடும். முன்னதாக வருமான வரித் துறை ஆதார் இல்லாத பான் கார்டை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யலாம் என்று கூறியிருந்தது. மேலும்,  வரி செலுத்துவோர், வருமான வாரியை தாக்கல் செய்யவும் முடியாது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் கீழ், வருமான வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரு குடிமகனும் பான் மற்றும் ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பது அவசியம். இரண்டு ஆவணங்களும் இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோரின் வரி திருப்பிச் செலுத்துதலும் சிக்கிக்கொள்ளக்கூடும்.


ALSO READ | தினம் ₹121 சேமித்தால் போதும்.. செல்ல மகளின் திருமணத்திற்கு கையில் ₹27 லட்சம் ..!!


முதலில் உங்கள் பான் அட்டை ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.


  • இதை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in  என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

  • இடதுபுறத்தில் எழுதப்பட்ட க்விக் லிங்கஸ் ர்ன கொடுக்கப்பட்டிருக்கும். அங்கே கிளிக் செய்ய வேண்டும்.

  • புதிதாக தோன்றும் பக்கத்தின் மேல் ஒரு ஹைப்பர்லிங்க் இருக்கும், அங்கு ஆதார் இணைப்பு குறித்த தகவல்கள் இருக்கும்

  • இந்த ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும்.

  • இதற்குப் பிறகு, அதில், வ்யூ லின்க் ஸ்டேடஸ் என்னும் இணைப்பை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டிருக்கிறதா இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.


அப்படி இல்லை என்றால், ஆதார் அட்டையை பான் கார்டுடன் எவ்வாறு இணைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்


எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறை


  • உங்கள் தொலைபேசியில்,  பெரிய எழுத்தில் IDPN என டைப்  செய்து, ஸ்பேஸ் விட்டு ஆதார் எண் மற்றும் பான் எண்ணை உள்ளிடவும்.

  • இந்த தகவலை 567678 அல்லது 56161 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும்.

  • இதன் பின்னர் வருமான வரித் துறை இரு ஆவணங்களையும் இணைக்கும் பணியைத் தொடங்கும்.


ஆதார் பான் அட்டையை ஆன்லைன் மூலமாகவும்  சுலபமாக இணைக்கலாம். அதற்கான வழிமுறைகள்


  • வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடது பக்கத்தில் உள்ள க்விக் லிங்க் ஆப்ஷனை, கிளிக் செய்ய வேண்டும்.

  • உங்களுக்கு அதில் கணக்கு இல்லை என்றால், முதலில் பதிவு செய்யுங்கள். இங்கே நீங்கள் பான், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும். பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு  OTP வரும்.

  • OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.


ALSO READ | How to become rich: கோடீஸ்வரியாக வேண்டுமா? இதோ top tips


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR