தினம் ₹121 சேமித்தால் போதும்.. செல்ல மகளின் திருமணத்திற்கு கையில் ₹27 லட்சம் ..!!

நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்கும் பெரும் கவலை, பெண்களுக்கு நன்றாக திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தான். மகள் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க தந்தை தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை செலவிடுகிறார். ஆனால் நீங்கள்  திட்டமிட்டு செயல்பட்டு எல்.ஐ.சி.யின் இந்த திட்டத்தில் சேமித்தால், எளிதாக பணம் சேர்க்கலாம்.

புதுடெல்லி: தங்கள் மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என ஆசைபடுபவர்களுக்காக, எல்.ஐ.சி (LIC)  ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது எல்.ஐ.சியின் கன்யதான் பாலிஸி . இந்த பாலிஸியை எடுத்தால் போதும், உங்கள் செல்ல மகளின் திருமணத்தை பற்றிய கவலையை விட்டுவிடலாம். அது குறித்த முழு விபரங்கள்... உள்ளே.....

1 /5

இந்த பாலிஸியில், நீங்கள் தினமும் ₹121 பிரீமியம் செலுத்த வேண்டும், அதாவது ஒவ்வொரு மாதமும் ₹3600. நீங்கள் விரும்பினால், குறைந்த பிரீமியத்தில் கூட இந்த பாலிசியை எடுக்கலாம். ஆனால் அதற்உ ஏற்பட படி பாலிஸியின் முடிவு காலத்தில் பெறும் தொகை குறைவாக இருக்கும் தினசரி ₹121 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ₹27 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

2 /5

உங்கள் மகளுக்கு பாலிசி எடுக்க விரும்பினால், உங்கள் வயது குறைந்தபட்சம் 30 வயது இருக்க வேண்டும், மகளின் வயது குறைந்தது 1 வயதாக இருக்க வேண்டும். இந்த பாலிசி 25 ஆண்டுகளுக்கு, ஆனால் பிரீமியம் தொகை 22 ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு எந்த பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் மகளின் வயதுக்கு ஏற்ப இந்த பாலிஸி செலுத்த வேண்டிய காலதை குறைக்கலாம்.

3 /5

இந்த பாலிஸியை 25 ஆண்டுகளுக்கு பதிலாக 13 ஆண்டுகளுக்கு எடுக்கலாம். திருமணத்தைத் தவிர, இந்த பணத்தை மகளின் கல்விக்காவும் பயன்படுத்தலாம்.  இந்த பாலிஸியை எடுத்தால், உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணத்தின் கவலைகளிலிருந்து நீங்கள் முழுமையாக விடுபடலாம்.

4 /5

துரதிஷ்டவசமாக, பாலிசி எடுத்த பிறகு, மகளுக்காக பாலிஸி எடுத்த பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்தினர் பிரீமியத்தை செலுத்த வேண்டியதில்லை. மரணம் தற்செயலானது என்றால், குடும்பத்திற்கு மொத்தமாக ₹10 லட்சம் கிடைக்கும். சாதாரண சூழ்நிலையில் மரணம் நிகழ்ந்தால், 5 லட்சம் ரூபாய் பெறப்படும். மேலும், முதிர்ச்சி அடையும் காலம் வரை ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்திற்கு ₹50,000 கிடைக்கும். அதாவது, டெத் பெனிபிட்டும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, நாமினியாக இருப்பவருக்கு  ₹27 லட்சம் வழங்கப்படும்.  

5 /5

இந்த பாலிஸியை எடுக்க உங்களுக்கு ஆதார் அட்டை, வருமான சான்றிதழ், அடையாள அட்டை, முகவரி ஆதாரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவைப்படும். இது தவிர, கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் பிறப்புச் சான்றிதழுடன், முதல் ப்ரீமியத்திற்கான ஒரு காசோலை அல்லது ரொக்கம் வழங்கப்பட வேண்டும்.