Paytm Fastag மாற்ற கடைசி வாய்ப்பு! இன்றே கடைசி நாள்.... இல்லையென்றால் 2 மடங்கு கட்டணம்
Paytm Fastag: Paytm Payments Bank மீது RBI எடுத்த நடவடிக்கையால் Paytm Fastag வாடிக்கையாளர்கள் மார்ச் 15, 2024க்குப் பிறகு ரீசார்ஜ் செய்யவோ அல்லது ரீசார்ஜ் செய்யவோ முடியாது.
Paytm Fastag Deadline: Paytm Payment Bank சேவை செயல்படுவது இன்றே கடைசி. இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால் Paytm Payments Bank உடன், Paytm Fastag சேவையும் நிறுத்தப்பட இருக்கிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (NHAI) மேற்கொண்ட ஆலோசனையில் Paytm Fastag விவகாரத்தில் மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு டோல் பிளாசாவில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, வேறு ஏதேனும் வங்கியில் இருந்து Fastag பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Paytm வாலட்டுடன் இணைக்கப்பட்ட Fastagஐப் பயன்படுத்தினால், மார்ச் 15க்குப் பிறகு உங்கள் Fastag ரீசார்ஜ் செய்ய முடியாது.
மார்ச் 16 ஆம் தேதி முதல் பேடிஎம் பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய முடியாது. ஒருவேளை நீங்கள் மார்ச் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் Paytm Fastag சேவையை தொடர்ந்தால், நெடுஞ்சாலையில் உள்ள டோல் பிளாசாவில் நீங்கள் இருமடங்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உங்கள் பேடிஎம் பாஸ்டேக் கணக்கில் பணம் இருந்தால் அந்த பணம் முடியும் வரை பேடிஎம் பாஸ்டேக்கை பயன்படுத்தி டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்தலாம்.
மேலும் படிக்க | Paytm FASTag: Paytm செயலி மூலம் FASTag கணக்கை மூடுவது எப்படி? மார்ச் 15 கடைசி தேதி
NHAI வெளியிட்ட வங்கிகளின் பட்டியல்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் (NHAI) புதிய Fastag வாங்க 39 வங்கிகள் மற்றும் NBFC களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் இருந்து உங்கள் வாகனத்திற்கான புதிய Fastagஐப் பெறலாம். NHAI வழங்கிய திருத்தப்பட்ட பட்டியலில் Paytm Payments Bank (PPBL) பெயர் சேர்க்கப்படவில்லை.
உங்கள் Paytm FASTag -ஐ எவ்வாறு மூடுவது?
Paytm Payments வங்கியால் வழங்கப்பட்ட FASTag - மூட விரும்பினால் கட்டணமில்லா எண்: 1800-120-4210 -ஐ அழைத்து, வாகனப் பதிவு எண் (VRN) அல்லது டேக் ஐடியுடன், பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை கூறவும். இதன்பின்னர், பேடிஎம் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர் ஆதரவு முகவர் உங்களைத் தொடர்புகொண்டு FASTag மூடப்பட்டதை உறுதிப்படுத்துவார்.
Paytm ஆப் மூலம் Paytm FASTag -ஐ மூடுவது எப்படி?
- உங்கள் Paytm கணக்கில் Login செய்யவும்
- அதில் 'FASTag' ஐ கிளிக் செய்யவும்
- ‘Manage FASTag’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- கீழே ஸ்க்ரோல் செய்து ‘Help & Support’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ‘Need help with non-order related queries' என்பதை தேர்வு செய்யவும். அதில் 5-6 தீர்வுகள் காட்டப்படும்.
- அதில் ‘I want to close my FASTag’ என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.
- FASTag கணக்கைத் தேர்ந்தெடுத்து, மூடுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அக்கவுண்ட் மூடப்பட்டவுடன், உங்கள் தொகை வங்கி கணக்குக்கு திருப்பி அளிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ