Paytm FASTag: Paytm செயலி மூலம் FASTag கணக்கை மூடுவது எப்படி? மார்ச் 15 கடைசி தேதி

Paytm FASTag: மார்ச் 15க்குப் பிறகு, Paytm Payments வங்கியால் வழங்கப்பட்ட FASTags செயல்படாது. அதனால், இந்த காலக்கெடுவுக்கு முன்பு Paytm FASTag கணக்கை மூட வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 7, 2024, 04:40 PM IST
  • பேடிஎம் பாஸ்டேக் கணக்கை மூடுவது எப்படி?
  • மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு டாப்அப் கிடையாது
  • செயலி மூலம் மூடுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்
Paytm FASTag: Paytm செயலி மூலம் FASTag கணக்கை மூடுவது எப்படி? மார்ச் 15 கடைசி தேதி title=

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments செயல்பாட்டை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகார வரம்பிற்கு ஏற்ப, Paytm Payments Bank (PPBL) புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை ஆர்பிஐதடை செய்துள்ளது. மேலும், மார்ச் 15, 2024க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கார்டுகள், Paytm Wallets, FASTags, NCMC கார்டுகள் போன்றவற்றின் டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள், டாப்-அப்கள் இவற்றின் மூலம் செய்ய முடியாது.

Paytm FASTag கணக்கில் பேலன்ஸ் இருந்தால்?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, மார்ச் 15க்குப் பிறகு, Paytm Payments வங்கியால் வழங்கப்பட்ட FASTags -ல் டாப்-அப்கள் அனுமதிக்கப்படாது. உங்களின் Paytm Fastag-ஐ, குறிப்பாக FASTagல் பேலன்ஸ் எதுவும் இல்லை என்றால் மார்ச் 15, 2024க்கு முன் மூடிவிடுங்கள். ஆர்பிஐ அங்கீகரித்திருக்கும் மற்றொரு தரப்பிடம் இருந்து புதிதாக Fastag -கணக்கை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏதேனும் பேலன்ஸ் பேடிஎம் பாஸ்டேக்கில் இருந்தால், தொகையை முடிக்கும் வரை அதைப் பயன்படுத்தலாம். அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதேநேரத்தில், உங்கள் Paytm FASTag -ஐ மூட குறைந்தது 5-7 நாட்கள் ஆகும். செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் மினிமம் பேலன்ஸ் உங்கள் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் வாலட்டில் திருப்பி அளிக்கப்படும். சிலர் 10 நாட்கள் வரை ஆவதாகவும் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது... திடீர் Logout - என்ன பிரச்னை?

உங்கள் Paytm FASTag -ஐ எவ்வாறு மூடுவது?

Paytm Payments வங்கியால் வழங்கப்பட்ட FASTag - மூட விரும்பினால் கட்டணமில்லா எண்: 1800-120-4210 -ஐ அழைத்து, வாகனப் பதிவு எண் (VRN) அல்லது டேக் ஐடியுடன், பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை கூறவும். இதன்பின்னர், பேடிஎம் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர் ஆதரவு முகவர் உங்களைத் தொடர்புகொண்டு FASTag மூடப்பட்டதை உறுதிப்படுத்துவார். 

Paytm ஆப் மூலம் Paytm FASTag -ஐ மூடுவது எப்படி?

- உங்கள் Paytm கணக்கில் Login செய்யவும்
- அதில் 'FASTag' ஐ கிளிக் செய்யவும்
- ‘Manage FASTag’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- கீழே ஸ்க்ரோல் செய்து ‘Help & Support’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ‘Need help with non-order related queries' என்பதை தேர்வு செய்யவும். அதில் 5-6 தீர்வுகள் காட்டப்படும்.
- அதில் ‘I want to close my FASTag’ என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.
 - FASTag கணக்கைத் தேர்ந்தெடுத்து, மூடுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அக்கவுண்ட் மூடப்பட்டவுடன், உங்கள் தொகை வங்கி கணக்குக்கு திருப்பி அளிக்கப்படும்.

மேலும் படிக்க | WhatsApp: பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் புதிய அம்சம் அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News