டிஜிட்டல் நிதி சேவை நிறுவனமான Paytm இன் போஸ்ட்பெய்ட் மைக்ரோ கடன் சேவை பயனர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை எட்டியுள்ளது. நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இறுதியில் 15 மில்லியன் சந்தாதாரர்களை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனம் இரண்டு வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (NFBC) கூட்டாக பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவைகளை வழங்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோருக்கான டெவலப்பர்கள் சமூகத்துடனான தனது கூட்டாளித்துவத்தை விரிவுபடுத்துவதாக Paytm ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.


ALSO READ: ஒரே இணைப்பில் 8 எண்களிலிருந்து அழைப்பு மற்றும் தரவை அனுபவிக்க சூப்பர் ஆப்பர்!


இந்த நடவடிக்கை வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் உதவும் என்று இணைய நிறுவனம் நம்புகிறது. ஏனெனில் இதில் Buy now and Pay Later-க்கான ஆப்ஷன் கிடைக்கும்.


Paytm இன் கூற்றுப்படி, போஸ்ட் பெய்டை க்ரெடிட் கார்டில் வாங்க, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட Paytm Android POS சாதனங்களுடன் ஒருங்கிணைக்க தயாராகி வருகிறது. வீட்டிற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, ரீசார்ஜ் செய்ய பில் கட்டணம் செலுத்த, இணைய பயன்பாடுகளுக்கான ஆன்லைன் கட்டணம் (Online Payment) மற்றும் மளிகைக் கடைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் ஏற்கனவே கிடைக்கின்றன.


Paytm இன் போஸ்ட்பெய்ட் கடன் வரம்பு மூன்று அடுக்குகளில் வருகிறது. பேஸ் ஸ்லாப், லைட், ரூ .20,000 வரையிலான வரம்புடன் வருகிறது. டிலைட் மற்றும் எலீட்டில் ரூ .20,000 முதல் ரூ .1,00,000 வரையிலான வரம்பு உள்ளது.


Paytm போஸ்ட்பெய்ட் Paytm, Paytm Mall இல் கிடைக்கும் பில் கட்டணம் வசதிகளை ஆதரிக்கிறது மற்றும் உபெர், மிந்த்ரா, லென்ஸ்கார்ட், கானா, பெப்பர்ஃப்ரீ, ஹங்கர்பாக்ஸ், பதஞ்சலி, ஸ்பென்சர் போன்றவற்றின் ஆன்லைன் கட்டணம் செலுத்த உதவுகிறது.


ALSO READ: புதிய அம்சங்களுடன் கூடிய Aadhaar PVC Card-ஐ எப்படி பெறுவது: எளிய வழிமுறைகள் இதோ!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR