பங்குச்சந்தை ஆர்வலர்களுக்கான ஒரு முக்கியமான தருணம் இது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் ஒரு மைல்கல் எட்டட்டப்பட்டுள்ள நிலையில், இந்தியா இது வரை கண்டிறாத மிகப்பெரிய பொது நிறுவனமாகப்போகும் Paytm-ல் முதலீடு செய்ய அனைவரும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது நாட்டில் டிஜிட்டல் இந்தியா கனவை நிஜமாக்குவதில் பல நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. அதில் டிஜிட்டல் நிதிச் சேவைகளை அளிக்கும் பேடிஎம் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. பேடிஎம் நிறுவனம் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. 


பங்குச் சந்தையில் நுழைய திட்டமிட்ட பேடிஎம், சில நாட்களுக்கு முன்னர் ஐ.பி.ஓ-ஐ வெளியிட (IPO Offering) முடிவு செய்து அதற்கான அனுமதிகளை SEBI-யிடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று நிறுவனம் தனது ஐ.பி.ஓ வெளியீட்டைத் தொடங்கியது. இதற்கான கடைசி தேதி நவம்பர் 10 ஆகும். 


இரண்டாவது நாளான நவம்பர் 9 அன்று ரூ.18,300 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ 36 சதவிகிதம் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டுள்ளது. 4.83 கோடி பங்குகளுக்கு எதிராக 1.73 கோடி ஈக்விட்டி பங்குகளுக்கான ஏலம் (Equity Bidding) நடந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி 1.05 மடங்கு சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்காக (Non-Institutional investors) ஒதுக்கப்பட்ட பகுதி 3 சதவீதம் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டது.


டிஜிட்டல் வர்த்தகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள பேடிஎம், பங்குச் சந்தையில் நுழைவதன் மூலம் தனது வணிகத் தளத்தை மேலும் திடப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம், சுமார் ரூ. 18,300 கோடியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டுவதை நிறுவனம்  இலக்காகக் கொண்டுள்ளது. 


ALSO READ: Zomato IPO: ஒதுக்கப்பட்ட பங்குகளின் ஸ்டேட்டஸ், பிற விவரங்களுக்கான நேரடி இணைப்புகள் 


பேடிஎம் பங்குகளின் விலைப்பட்டை (Price Band) ரூ.2,080 - ரூ.2,150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஐபிஓ வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவன மேன்பாட்டு பணிகளுக்காக செலவிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் வணிகத்தில் மேம்பாடுகளை செய்யவும், தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகளை செய்யவும், வாடிக்கையாளர் சேவையை மேபடுத்ததவும், புதிய வணிக முயற்சிகளை எடுக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.  


இது வரை கண்டிறாத மிகப்பெரிய பொது நிறுவனமாகிறது Paytm


முன்னதாக, 2010 ஆம் ஆண்டு, கோல் இந்தியா நிறுவனம், ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம், ரூ. 15,000 கோடி ரூபாயை திரட்டியது. இது மிக அதிக ஐ.பி.ஓ வெளியீட்டு நிதி திரட்டலுக்கான சாதனை அளவாக இருந்தது. 


தற்போது, பேடிஎம் (Paytm), ஐ.பி.ஓ வெளியீட்டிற்கான இலக்கை 18,300 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ஆகையால், இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாக பேடிஎம் உள்ளது.   


பேடிஎம் ஐ.பி.ஓ: லாபம் காண முடியுமா?


பேடிஎம், டிஜிட்டல் இந்தியா தளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கண்ட நிறுவனம். இதில் பேமெண்ட் பேங்க் வசதி, முதலீட்டு சேவைகள் என பல வசதிகள் ஒன்றாக கிடைக்கின்றன. இதனால், இது வாடிக்கையாளர்களுக்கு மிக வசதியான கட்டண தளமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கும் அதிக வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என்றும், அதனால், இதில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள். 


பேடிஎம் ஐ.பி.ஓ: முக்கிய தேதிகள்


பேடிஎம் ஐ.பி.ஓ வெளியீடு நேற்று துவங்கிய நிலையில், ஆர்வமுள்ளவர்கள் வரும் 10 ஆம் தேதி வரை இதில் முதலீடு செய்யலாம். பே.டி.எம் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் (Share Market) நவம்பர் 18 ஆம் தேதி பட்டியலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: Paytm IPO news: Paytm IPO திட்டங்கள், பெரிய அளவில் நிதி திரட்டுவதற்கான ஸ்கெட்ச் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR