Paytm IPO news: Paytm IPO திட்டங்கள், பெரிய அளவில் நிதி திரட்டுவதற்கான ஸ்கெட்ச்

Paytm to launch biggest ever IPO in India: நாட்டின் மிகப்பெரிய இ-வாலட் நிறுவனமான Paytm, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ (IPO) ஐ கொண்டு வர உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 05:39 PM IST
  • 2010 ஆம் ஆண்டில், கோல் இந்தியா லிமிடெட் ஐபிஓ மூலம் ரூ .15,000 கோடிக்கு மேல் திரட்டியது.
  • இந்த ஐபிஓ மூலம் ரூ .21,800 கோடியை திரட்டுவது பேடிஎம் நோக்கம்.
  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஆரம்ப பொது சலுகையை திறக்க பேடிஎம் திட்டமிட்டுள்ளது.
Paytm IPO news: Paytm IPO திட்டங்கள், பெரிய அளவில் நிதி திரட்டுவதற்கான ஸ்கெட்ச் title=

புது டெல்லி: நாட்டின் மிகப்பெரிய இ-வாலட் நிறுவனமான Paytm தனது வாலட் ஐ ஐபிஓ (IPO) மூலம் நிரப்ப திட்டமிட்டுள்ளது. ஐபிஓ மூலம், நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் சம்பாதிக்க ஒரு வாய்ப்பையும் வழங்க உள்ளது. நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை அதாவது முதன்மை சந்தையில் இருந்து சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிறுவனம் தனது (ஆரம்ப பொது வழங்கல்) ஐபிஓவை செப்டம்பர் 2021 க்கு முன் தொடங்கும்.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, நாட்டின் மிகப்பெரிய கட்டண சேவை வழங்குநரான Paytm இன் தாய் நிறுவனமான (Parent company) One97 கம்யூனிகேஷன்ஸின் (One97 Communications) இயக்குநர்கள் குழு, மே 28 அன்று, அதாவது நாளை, ஐபிஓவை (IPO) அங்கீகரிக்க ஒரு கூட்டத்தை நடத்துகிறது. இந்த ஐபிஓ மூலம், பேடிஎம் அதன் மதிப்பீட்டை 25 முதல் 30 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

ALSO READ | இனி, Google Pay, Paytm செயலிகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்

Paytm ஐபிஓவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியாளர்களில் மோர்கன் ஸ்டான்லி, சிட்டி குழுமம், ஜே.பி. மோர்கன் போன்ற முதலீட்டு ஆதரவாளர்களும் அடங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோர்கன் ஸ்டான்லி முன்னணி மேலாளராகும் போட்டியில் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஓவின் செயல்முறை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், Paytm அல்லது இந்த முதலீட்டு ஆதரவாளர்கள் இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வழங்கவில்லை.

சந்தை கட்டுப்பாட்டாளர் செபியின் விதிகளின்படி, ஐபிஓவைக் கொண்டுவந்த நிறுவனம் முதல் 2 ஆண்டுகளில் 10 சதவீதத்தை மக்களுக்கு வழங்க வேண்டும், அதே நேரத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இது 25 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News