Paytm: சில நாட்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு வாடிக்கையாளர்களின் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், ஃபாஸ்ட்டேக்குகள் (FASTags) மற்றும் வாலட்டுகள் போன்றவற்றில் டெபாசிட்கள் அல்லது டாப்-அப்களை பெறுவதற்கு Paytm Payments Bank Ltd -க்கு ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தடை விதித்தது. இதற்கான விரிவான அறிவிப்பை ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டது. இதன் பிறகு பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கும் பல அச்சங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்குச்சந்தையில் பதற்றம்


இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இடியாக இன்று, அதாவது வெள்ளிக்கிழமை, இரண்டாவது நாளாக, பங்குச்சந்தை வர்த்தக அமர்வில், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஸ்டார்ட்அப் Paytm இன் தாய் நிறுவனமான One 97 Communications Ltd இன் பங்குகள் 20% -க்கு கீழ் சரிவை சந்தித்தன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு (Paytm Customers) மத்தியில் ஏற்பட்ட அச்சமும் பதற்றமும்தான் இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். 


வணிகத்தை எதிர்மறையாக பாதிக்கும்: ஆய்வாளர்கள்


Paytm Payments Bank Limited-க்கு எதிராக RBI எடுத்துள்ள நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சவால்களை தங்கள் நிறுவனத்தால் எளிதாக சமாளிக்க முடியும் என்று Paytm வலியுறுத்தியுள்ளது. எனினும், ஆர்பிஐ (RBI) -இன் இந்த நடவடிக்கை Paytm இன் வணிகத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் ஒரு எடுத்துக்காட்டு கடந்த இரண்டு நாட்களாக அந்த நிறுவனத்தின்  பங்குகளில் தெரிகின்றன.


பேடிஎம் பங்குகளில் மிகப்பெரிய சரிவு


மும்பை பங்குச்சந்தை குறியீடான BSE -இல் Paytm பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தன. இந்த பங்கு 20 சதவீத லோயர் சர்க்யூட் வரம்பான ரூ.487.05 இல் லாக் செய்யப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. Paytm இன் சந்தை மூலதனம் தற்போது ரூ.30940 கோடியாக உள்ளது. முதலீட்டாளர்கள் சுமார் ரூ.17500 கோடியை இழந்துள்ளனர். இன்னும் வரும் நாட்களில் இந்த சரிவு அதிகரிக்கும் என்ற ஊகங்கள் இருக்கும் நிலையில், தினமும் 20 சதவிகித லோயர் சர்க்யூட்டில் பங்குகள் லாக் ஆனால், நஷ்டத்தின் அளவு இன்னும் அதிகமாகும். மேலும் வணிகத்தின் போது ஒரு ஷேர் லாக் ஆகும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் அதை வாங்குவதோ விற்பதோ மிகக்கடினம் என்பது குறிப்பிடத்தக்கது. 


நிறுவனம் கூறுவது என்ன? 


Paytm இன் ஆய்வாளர் அழைப்பின் போது, நிறுவனத்தின் நிர்வாகம் செயல்பாடுகளை சரிசெய்தல் அவசியம் என்றும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் கூறியதாக அரிஹந்த் கேபிட்டல் மூலம் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை விரைவில் மாறும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 4% DA ஹைக், ஜாக்பாட் சம்பள உயர்வு


பேடிஎம் -இன் எதிர்காலம் குறித்து பல வித வதந்திகள் பரவி வரும் நிலையில், நிறுவனர் மற்றும் சிஇஓ விஜய் சேகர் X இல், "ஒவ்வொரு Paytmer -க்கும் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால், உங்களுக்குப் பிடித்த செயலி நன்றாக வேலை செய்துகொண்டு இருக்கிறது. பிப்ரவரி 29க்குப் பிறகும் அது வழக்கம் போல் வேலை செய்யும்.


உங்களின் இடைவிடாத ஆதரவிற்காக Paytm குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து நானும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து சவால்களுக்கும் ஒரு தீர்வு உள்ளது. மேலும் முழு இணக்கத்துடன் நமது தேசத்திற்கு சேவை செய்ய நாங்கள் உண்மையாக கடமைப்பட்டுள்ளோம்.


பணம் செலுத்தும் வழிமுறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மற்றும் நிதிச் சேவைகளில் இவற்றை சேர்ப்பதில் இந்தியா உலகளாவிய பாராட்டுகளை வென்று கொண்டே இருக்கும் - PaytmKaro அதன் மிகப்பெரிய சாம்பியனாக இருக்கும்." என்று எழுதி வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.


Paytm செயலி குறித்து தற்போது பலருக்கு இருக்கும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்


கடைக்காரர்கள் Paytm மூலம் பணம் பெற முடியுமா?


இப்போது முடியும். ஆனால், Paytm Payment Bank இல் பணம் பெற்றால், பிப்ரவரி 29 க்குப் பிறகு அவர்களால் பணத்தைப் பெற முடியாது. 


உணவு மற்றும் எரிபொருள் தொடர்பான சப் வாலட்களுக்கு என்ன ஆகும்?


சப் வாலட்டில் உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் இப்போது அதில் புதிய தொகையைச் சேர்க்க முடியாது.


Paytm Payments வங்கிக் கணக்கு இருந்தால் என்ன செய்வது?


பிப்ரவரி 29க்குப் பிறகு, உங்களால் Paytm Payments வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் செய்ய முடியாது.


மேலும் படிக்க | Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்! விளக்கம் சொல்லும் பேடிஎம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ